“டி20 கிரிக்கெட்.. உலககோப்பை சாதனை வீரரை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் விளையாட விரும்பல” – ஆகாஷ் சோப்ரா பேச்சு

0
121
Akash

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடருக்கு உள்நாட்டில் வேகமாக தயாராகி வருகிறது.

இந்த டெஸ்ட் தொடர் மார்ச் நடுவில் முடிவடைய, இதற்கு அடுத்து இந்தியாவில் மார்ச் இறுதியில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கிறது. ஐபிஎல் தொடரை முடித்துக் கொண்டதும் நேராக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட செல்கிறது.

- Advertisement -

நடுவில் நிறைய டி20 போட்டிகள் இல்லை என்கின்ற காரணத்தினாலே, உள்நாட்டில் ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை இழந்ததும் அடுத்த மூன்று நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

இந்தத் தொடரின் கடைசி இரண்டு போட்டிகளுக்கு ஸ்ரேயாஸ் ஐயர் அழைக்கப்பட்டார். மேலும் அதுவரையில் துணை கேப்டனாக இருந்த ருத்ராஜ் நீக்கப்பட்டு அந்த பொறுப்பு இவருக்கு கொடுக்கப்பட்டது. இவர் தன் பங்குக்கு அந்தத் தொடரில் கிடைத்த வாய்ப்பில் ஒரு அரை சதம் அடித்தார்.

இதற்கடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றார். ஆனால் அவருக்கு மேற்கொண்டு விளையாட அந்தத் தொடரில் ஒரு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

இதற்கு அடுத்து இந்தியாவில் தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கு ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் மிடில் வரிசையில் களம் இறங்கி ஐநூறுக்கு மேற்பட்ட ரன்கள் குவித்து ஸ்ரேயாஸ் அய்யர் தனிச் சாதனை படைத்திருந்தார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அவரை வைத்து டி20 கிரிக்கெட் விளையாட மாட்டோம் என்று முடிவெடுத்து விட்டார்கள் போல. ஒருநாள் போட்டிகள் இப்பொழுது இல்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் விளையாடுவார். அதுவும் கில் ஸ்ரேயாஷ் மற்றும் கேஎல்.ராகுல் மூவரில் இருவருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைக்கும்.

அந்த இருவர் யார் என்பது எனக்கு தெரியாது. அவரை டி20 கிரிக்கெட்டுக்கு பரிசீலிக்கவில்லை, தற்போது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இல்லை, இப்போதைக்கு டெஸ்ட் மட்டுமே இருக்கிறது. ஆனாலும் அவருக்கு ஒரு நல்ல ஐபிஎல் சீசன் அமையும்” என்று நம்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.