தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம் நடத்தும் டிஎன்பிஎல் தொடரில் இருந்து ஐபிஎல் தொடருக்கு சென்று அங்கிருந்து இந்திய அணிக்கு மூன்று கிரிக்கெட்டிலும் தமிழகத்தைச் சேர்ந்த இடதுகை வேகம் பந்துவீச்சாளர் டி.நடராஜன் அறிமுகமானார். இந்த நிலையில் இந்திய அணியில் தனக்கான வாய்ப்பு குறித்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருப்பதாகப் பேட்டி அளித்திருக்கிறார்.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் நடராஜன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 19 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்தார். இதில் மிக முக்கியமாக மிடில் மற்றும் கடைசியில் ஓவர் வீசிக் கொண்டிருந்த நடராஜன் பவர் பிளேவிலும் பந்து வீசினார்.
மேலும் எப்பொழுதெல்லாம் அணிக்கு விற்கத் தேவையாக இருக்கிறதோ அப்போதெல்லாம் கேப்டன் கம்மின்ஸ் நடராஜனிடம் நம்பிக்கையாகப் பந்தை கொடுத்தார். அதே சமயத்தில் நடராஜன் மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவருடைய யார்க்கர் மட்டும் இல்லாமல் மெதுவான பவுன்சர் பந்துகள் மற்றும் கட்டர்கள் மிகச் சிறப்பாக இருந்தன.
இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் அந்த சூழ்நிலைக்கு நடராஜனின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருக்கும் எனவும், எனவே அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வேண்டும் என ரசிகர்கள்எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரை தேர்வு செய்யவில்லை. தொடர்ந்து ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களிலும் தேர்வு செய்யவில்லை. இதனால் ரசிகர்கள் பிசிசிஐ நடராஜன் விஷயத்தில் அரசியல் செய்து ஏற்றத்தாழ்வு காண்பிப்பதாக விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக தமிழக ரசிகர்கள் இத்தகைய விமர்சனத்தை செய்கிறார்கள்.
இது குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடராஜனிடம் கேட்ட பொழுது “பிசிசிஐ என்னிடம் எந்தவிதமான ஏற்றத்தாழ்வையும் காட்ட வில்லை. என்னுடைய தேர்வு விஷயத்தில் எந்த விதமான அரசியலும் செய்யப்படவில்லை. பிசிசிஐ எனக்கு வாய்ப்பு வழங்கிய காரணத்தினால் தான் நான் இன்று உங்கள் முன்னால் நடராஜனாகவே இருக்கிறேன்.
இதையும் படிங்க : ஏன் அந்த அவுட் தரல.. ரிச்சர்ட்டை எப்ப பார்த்தாலும் கேட்பேன்.. கோப்பையே போச்சு – பும்ரா ஆதங்கம்
எனக்கு நடுவில் சில காயங்கள் ஏற்பட்டது. என்னால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. பிறகு நான் ஐபிஎல் தொடரில் இந்த வருடம் வந்து நன்றாக செய்திருக்கிறேன். நான் செய்ய வேண்டியது எல்லாம் தொடர்ந்து என்னுடைய செயல் முறையில் கவனம் செலுத்தி வேலை செய்ய வேண்டும். எனக்கான வாய்ப்புகளும் நிச்சயம் வரும். மேலும் எனக்கு பிசிசிஐ உதவிகள்தான் செய்திருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.






