இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தனக்கு கேப்டன் பதவி வழங்கப்படாதது குறித்தும், நடுவர் தன் பந்துவீச்சில் தந்த தவறான ஒரு தீர்ப்பு குறித்து எப்போதும் கேட்க விரும்புவதாகவும், மிகவும் தைரியமாகவும் அதே நேரத்தில் சுவாரசியமான விஷயங்களையும் ஒரு தனியார் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு பேசியிருக்கிறார்.
இதுகுறித்து பேசி இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா “கேப்டன் பதவி நான் முடிவு செய்ய முடியாத விஷயம். இப்பொழுது நான் சென்று அவர்களிடம் எனக்கு பொறுப்பை கொடுக்குமாறு கேட்க முடியாது. எனக்கு அந்த அளவிற்கு அதிகாரம் இல்லை. அது என் வரம்புக்கு மீறிய விஷயமாக இருக்கிறது. அதே சமயத்தில் பந்துவீச்சாளர்கள் புத்திசாலிகள் என்று நான் நினைக்கிறேன்.
சிறிய மைதானங்கள், பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளங்கள் மற்றும் தரமான பேட்கள் என எல்லாம் பவுலர்களுக்கு எதிராக இருந்த போதும் அவர்கள் சிறப்பாக சிந்திக்கிறார்கள். இதுவரை எந்த ஒரு கட்டுரையும் பந்தை ஸ்பிங் செய்வது பற்றிகூறியதில்லை. பவுலர்கள்தான் அதைச் செய்கிறார்கள். இப்படி எந்த நேரமும் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பலர்கள்தான் போராடுகிறார்கள்.
பவுலர்கலாகிய நாங்கள் கடினமாக போராட வேண்டும். நாங்கள் பேட்டுக்கு பின்னால் ஒளிந்து கொள்ளவில்லை. பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்திற்கு பின்னால் ஒளிந்து கொள்ளவில்லை. நாங்கள் போராடுவதில் முதல் இடத்தில் இருக்கிறோம். ஒரு போட்டியில் நாங்கள் சரியாக செயல்பட விட்டால் கூட நாங்கள் விமர்சிக்கப்படுகிறோம்.
கேப்டன் பொறுப்பில் நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஆஸ்திரேலியா அணிக்கு கம்மின்ஸ் சிறப்பாக விளையாடுவதை பார்த்திருக்கிறோம். பாகிஸ்தான் அணிக்கு வாசிம் அக்கரம் மற்றும் வக்கார் யூனுஸ் சிறப்பாக செயல்பட்டதை நான் பார்த்திருக்கிறேன். மேலும் இம்ரான் கான் அவர்களுக்கு உலக கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். நமக்கு கபில் தேவ் அதையே செய்திருக்கிறார். எனவே கேப்டன் பொறுப்புக்கு பந்துவீச்சாளர்கள் எப்பொழுதும் புத்திசாலிகளாக இருப்பார்கள். ஆனால் உடல் ரீதியாக சில கடினங்கள் இருக்கின்ற காரணத்தினால், கேப்டன் பொறுப்பு பேட்ஸ்மேன்களிடம் சென்று விடுகிறது என்று புரிந்து கொள்கிறேன்.
இதையும் படிங்க : 11 ஓவர்.. 10 விக்கெட்.. பங்களாதேசை பந்தாடிய மந்தனா ஷபாலி.. பைனலில் இந்திய அணி.. மகளிர் ஆசிய கோப்பை 2024
மேலும் நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் லபுஷானுக்கு என் பந்துவீச்சில் எல்பி டபிள்யு நடுவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ கொடுக்கவில்லை. ஆனால் ரிவ்யூ செய்து பார்த்த பொழுது பந்து லெக் ஸ்டெம்பை உரசியது. எனவே இது அம்பயர்-காலாக மாறியது. இதற்காக நான் எப்பொழுது அவரை சந்தித்தாலும் ஏன் அவுட் தரவில்லை? என்று கேட்பேன்” என்று கூறியிருக்கிறார். இந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் லபுஷான் மற்றும் ஹெட் இருவரும் சேர்ந்து 192 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். இந்திய அணி உலக கோப்பையை இழப்பதற்கு இது முக்கியமான பார்ட்னர்ஷிப் ஆகவும் அமைந்தது!






