2025 ஆம் ஆண்டு 18 ஆவது ஐபிஎல் சீசன் மும்பை இந்தியன்ஸ் அணி தனது தொடக்கப் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு யார் கேப்டனாக செயல்படுவார்? என ஹர்திக் பாண்டியா கூறியிருக்கிறார்.
கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கடைசி போட்டியில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்தை விட பந்து வீசு அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் ஒரு போட்டியில் விளையாடுவதற்கு மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை வருகின்ற சிஎஸ்கே அணிக்கு எதிரான முதல் போட்டியில் வருகிறது. எனவே சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா விளையாட மாட்டார்.
வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் முதல் போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாட மாட்டார் என்பது அதிகாரப்பூர்வமற்ற தகவலாகவே இதுநாள் வரையில் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டார் என்று கூறப்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக யார் செயல்படுவார்கள் என்று கூறிய ஹர்திக் பாண்டியா “தற்போது இந்திய டி20 அணியை சூரியகுமார் யாதவ் வழி நடத்துகிறார். நான் இல்லாத சமயத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவதற்கு அவர் சிறந்த தேர்வாக இருப்பார். இதற்கு அவர் ஒரு அற்புதமான ஆப்ஷன். அவரே மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்துவார்” என்று கூறியிருக்கிறார்.
என்னுடன் விளையாடும் மூன்று கேப்டன்
“தற்போது என்னுடன் மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா, சூர்யா குமார் யாதவ் மற்றும் உம்ரா என மூன்று கேப்டன்கள் விளையாடுகிறார்கள். இதனால் எனக்கு மூன்று சிறந்த ஆலோசனைகள் களத்தில் கிடைக்கிறது. அவர்களுடைய மூளையும் இதில் இணையும் பொழுது மிகவும் அற்புதமான ஒன்றாக அமைகிறது. நான் இதை மிகவும் பாசிட்டிவ் ஆகவே எடுத்துக் கொள்கிறேன்”
இதையும் படிங்க : அஸ்வின் கையில் 4 பந்து.. கால் நடுங்க நின்ற யுனிவர்சல் பாஸ் கெயில்.. தோனிதான் காரணம் – ஸ்ரீகாந்த் பேச்சு
“கடந்த ஆண்டு நாங்கள் விளையாடிய கடைசி போட்டியில் கூடுதலாக இரண்டு நிமிடங்கள் பந்து வீச்சுக்கு எடுத்துக் கொண்டோம். இதன் காரணமாக கேப்டன் ஆன எனக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது. விதி அப்படித்தான் சொல்கிறது என்கின்ற பொழுது நாங்கள் விதியை மதித்து செயல்படுகிறோம். எனவே சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் நான் விளையாட மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.






