இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஒரு குறிப்பிட்ட திறமையை வெளியில் காட்டியது சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனிதான் என கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணியில் இடம் பெறுவதற்கு சிஎஸ்கே அணியில் மகேந்திர சிங் தோனி தலைமையில் விளையாடியது முக்கிய காரணமாக அமைந்தது. இந்த நிலையில் சிஎஸ்கே அணிக்கு அவர் இந்த முறை மீண்டும் திரும்ப வந்திருக்கிறார். தோனி ஓய்வு பெறும் காலகட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அனுபவம் சிஎஸ்கே அணிக்கு பெரிய அளவில் உதவும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
கெயில் கால் நடுங்கியது
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஐபிஎல் செயல்பாடு குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் “கிறிஸ் கெயில் நினைத்தால் யாரையும் சிக்ஸர் பவுண்டரிகளுக்கு மிக சாதாரணமாக அடிக்க முடியும். ஆனால் அப்படிப்பட்டவரை அவுட் செய்வதற்கு அஸ்வினுக்கு பெரும் நான்கே பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது. அஸ்வின் கைகளுக்கு பந்து சென்றதும் கெயிலின் கால்கள் நடுங்கத் தொடங்கியது”
“ரவிச்சந்திரன் அஸ்வினை சிறந்த டி20 பந்துவீச்சாளராக வெளியில் அடையாளம் காட்டியது அப்போது சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக இருந்து மகேந்திர சிங் தோனிதான். அஸ்வின் டி20 கிரிக்கெட்டில் ஆரம்பித்து ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என மிகச் சிறந்த முறையில் செயல்பட்டிருக்கிறார். அவர் ஒரு சிறந்த பந்துவீச்சாளர் மட்டும் கிடையாது சிறந்த பேட்ஸ்மேன் கூட ” என்று தெரிவித்திருக்கிறார்.
அஸ்வின் – கெயில் அசத்தல் புள்ளி விபரங்கள்
இந்த நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி பேசி இருக்கும் சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் “நான் அஸ்வினை முதல் முறையாக அவர் முதல்தர கிரிக்கெட் விளையாட ஆரம்பித்த 2006 காலகட்டத்தில் பார்த்தேன். அப்போது நான் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தில் பொறுப்பில் இருந்தேன். பிறகு அவர் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு 2009ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் எங்களுக்குள் நல்ல உறவு உருவானது” என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: விராட் கோலியுடன் உலக கோப்பையை ஜெயிச்சு.. ஐபிஎல்-ல் அம்பயர் ஆக வரும் வீரர் – சுவாரசிய தகவல்
ஐபிஎல் தொடரில் கெயிலை இதுவரையில் அஸ்வின் மொத்தம் ஐந்து முறை வீழ்த்தி இருக்கிறார். சிக்ஸர் அடிப்பதில் பெயர் பெற்ற யுனிவர்சல் பாஸ் கெயில் எட்டு ஆண்டு ஐபிஎல் பயணத்தில் மூன்று சிக்ஸர்கள் மட்டுமே ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு எதிராக அடித்திருக்கிறார். மேலும் அஸ்வின் பந்துவீச்சில் 64 பந்துகளை சந்தித்த அவர் 100 ஸ்ட்ரைக் ரேட் கீழே 53 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






