நேற்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வீரர் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி அணியை வெல்ல வைத்து பிளே ஆப் சுற்றுக்கு கூட்டி சென்று ஆட்டநாயகன் விருது வென்றார். பிறகு இதற்கான காரணம் குறித்து சுவாரசியமான விஷயத்தை கூறியிருக்கிறார்.
நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியை வென்றால் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி விடலாம் என்ற சூழ்நிலையில் மும்பை அணி களம் இறங்கியது. ஆனால் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாகவும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருந்ததால் கடைசி இரண்டு ஓவர்களுக்கு முன்பு வரை போட்டி டெல்லி அணியின் கைகளில் இருந்தது.
சூரியகுமார் நமன் திர் கலக்கல்
இந்த நிலையில் சூரியகுமார் மற்றும் நமன் திர் இருவரும் சேர்ந்து கடைசி 12 பந்துகளில் மட்டும் மொத்தம் 48 ரன்கள் குவித்து போட்டியை ஒட்டுமொத்தமாக மும்பை அணியின் பக்கமாக கொண்டு வந்து விட்டார்கள். இந்த போட்டியில் சூரியகுமார் யாதவ் இறுதி வரை களத்தில் நின்று ஆட்டம் இழக்காமல் 43 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 73 ரன்கள் குவித்தார். மும்பை அணி 180 ரன்கள் எடுத்தது.
இதற்கு அடுத்து விளையாடிய டெல்லி அணியால் இறுதியில் 121 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதைத் தொடர்ந்து 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. இதன்மூலம் ப்ளே ஆப் பரபரப்புகள் முடிவுக்கு வந்திருக்கிறது.
என் மனைவிதான் காரணம்
இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது ” இப்போது எங்கள் அணிக்கு 13 ஆட்டங்கள் முடிவடைந்து இருக்கின்றன. இந்த நிலையில் என் மனைவி எனக்கு ஒரு இனிமையான கதையை சொன்னார். அதாவது நான் இந்த 13 போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை தவிர மற்ற அனைத்து விருதுகளையும் வாங்கி விட்டதாக கூறினார். இந்த விருது இன்று மிகவும் முக்கியமானது. மேலும் இந்த போட்டி அணியின் பார்வையில் மிக மிக முக்கியமானது”
இதையும் படிங்க : 2-1.. மீண்டும் பட்டையை கிளப்பிய யுஏஇ வரலாற்று தொடர் வெற்றி.. பங்களாதேஷ் அணி பரிதாபம்
“எனவே இந்த ஆட்டநாயகன் விருதை என் மனைவிக்கு சமர்ப்பிக்கிறேன். வெளிப்படையாகவே நாங்கள் இப்படியான ஒன்றை எதிர்நோக்குகிறோம். மேலும் நாங்கள் இதற்காக கொண்டாடுகிறோம். இறுதி வரை இருந்து ஒருவர் ஆட்டத்தை எடுத்துச் செல்ல வேண்டி இருந்தது. மேலும் ஏதாவது ஒரு ஓவரில் இடையில் 15, 20 ரன்கள் வரும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் அதற்காக கடைசி ஒவ்வொரு வரை காத்திருக்க வேண்டி இருந்தது. அதே சமயத்தில் நான் உள்ளே வந்து அந்த ஆற்றலை என்னுடன் பகிர்ந்து கொண்டது சிறப்பானது” என்று கூறியிருக்கிறார்.






