இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி நெருக்கடியில் சிக்கிய பொழுது கேப்டன் சூரியகுமார் மட்டும் தனியாக போராடி 49 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இவரே ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஒன்பது விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய அமெரிக்கா அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. இந்திய அணி 29 ரன்கள் வித்தியாசத்தில் முதல் வெற்றி பெற்றது.
இது வரும் என்று தெரியும்
இது குறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது ” பாருங்கள் இப்படிப்பட்ட ஒரு ஆட்டம் சூழல் வரும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். நான் கடந்த சில போட்டிகளில் அணிக்காக கட்டுப்படுத்தி விளையாட முயற்சி செய்தேன். ஆனால் அது என் வழியில் செல்லவில்லை. தென் ஆப்பிரிக்க தொடருக்கு பிறகு நான் இதையெல்லாம் விட்டுவிட்டு இரண்டு வாரம் என் குடும்பத்துடன் செலவு செய்தேன். அடுத்து புதிய ஆண்டில் நாக்பூரில் எனக்கு சிறந்த இன்னிங்ஸ் வந்தது”
“நாங்கள் 77 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்த பொழுது ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரையில் விளையாட வேண்டும் என்று நினைத்தேன். இது 180 ரன் வரும் விக்கெட் இல்லை, 140 ரன் விக்கெட் என்று உணர்ந்தேன். 14வது ஓவரில் ஆட்ட இடைவேளையின் போது வந்த கவுதி பாய் ‘இறுதிவரை நீ விளையாடு தேவைப்படும் பொழுது வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்’ என்று சொன்னார்”
எனக்கு இது நன்றாக தெரியும்
“மேலும் நான் மும்பையில் அதிகம் விளையாடி இருப்பதால் எனக்கு இங்கு ஆடுகளங்கள் எப்படி இருக்கிறது என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து மிக நன்றாகவே தெரியும். அதனால் நான் அந்த அடிப்படையில்தான் இன்று விளையாடினேன்”
இதையும் படிங்க : 77/6 டு 161/9.. சூரியகுமார் சாதனை இன்னிங்ஸ்.. கேலிக்கு முற்றுப்புள்ளி.. இந்திய அணி யுஎஸ்ஏவை வென்றது
“நாம் முதல் ஆறு விக்கெட்டுகளை மிக வேகமாக இழந்துவிட்ட பிறகு யாராவது ஒருவர் கடைசி வரையில் நின்று விளையாட வேண்டும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் யார் பந்து வீசப் போகிறார்கள்? யாருக்கு எவ்வளவு ஓவர்கள் மீதம் இருக்கிறது? என்று எண்ணிக் கொண்டிருந்தேன். நல்ல ஷாட்களையும் அதேபோல எனக்கு இயல்பாக வரும் ஷாட்களையும் விளையாட முடிவு செய்தேன்” என்று கூறி இருக்கிறார்.






