டி20 வேர்ல்ட் கப் தொடரின்போது சஞ்சு சாம்சனை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியது மற்றும் அவர் அளித்த நெகிழ்ச்சியான பதில் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மனம் திறந்து பேசி உள்ளார்.
தொடரின் ஆரம்ப கட்டத்தில் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இஷான் கிஷனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பின்னர் தனக்குக் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திய சஞ்சு சாம்சன், நாக் அவுட் போட்டிகளில் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து இந்திய அணி கோப்பையைக் கைப்பற்ற முக்கியக் காரணமாக அமைந்தார்.
அணியிலிருந்து நீக்கப்பட்டபோது சஞ்சு சாம்சனின் ரியாக்ஷன் குறித்து சூர்யகுமார் யாதவ் பேசும்போது, “நாங்கள் பஸ்ஸில் சென்று கொண்டிருந்தபோது, தற்போதைய சூழ்நிலையில் உங்களுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு தருவது கஷ்டம் என்று அவரிடம் கூறினேன். அதற்கு அவர் ‘இந்திய டீம் வேர்ல்ட் கப் வெல்ல எது சரியோ அதைச் செய்யுங்கள், டீமுக்கு எப்போது தேவைப்பட்டாலும் விளையாட நான் ரெடியாக இருப்பேன்’ என்று கூறினார். இதைக் கேட்டவுடன் எனக்கு மிகப்பெரிய கான்ஃபிடன்ஸ் கிடைத்தது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் சஞ்சு சாம்சனை டீமிலிருந்து வெளியே உட்கார வைத்தது பற்றி பேசிய சூர்யகுமார் யாதவ், “அவரை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியதுதான் நான் எடுத்த மிகக் கடினமான டிசிஷன். அவர் ஒரு சிறந்த மனிதர் என்பதால் எனக்கு அது மிகவும் கஷ்டமாக இருந்தது. 2024 ஸ்ரீலங்கா சீரிஸில் அவர் சரியாக ரன் அடிக்காதபோது கூட, அடுத்த 7 மேட்ச்களில் டக் அவுட் ஆனாலும் 8வது மேட்சிலும் உனக்கு வாய்ப்பு தருவேன் என்று நான் அவருக்கு அஷ்யூரன்ஸ் கொடுத்திருந்தேன்” என்று கூறி இருக்கிறார்.