இந்திய கிரிக்கெட்

என்னை அநியாயமா டீம்ல இருந்து தூக்கிட்டாங்க.. ஏன் செஞ்சாங்கனே புரியல.. மீட்டது இவங்கதான் – சூரியகுமார் பேட்டி

​டி20 வேர்ல்ட் கப் 2026 தொடரில் இந்திய டீம் சாம்பியன் பட்டம் வென்ற பிறகு, டீமிலிருந்து நீக்கப்பட்டது குறித்து இந்திய கிரிக்கெட் பிளேயர் சூர்யகுமார் யாதவ் முதன்முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.

- Advertisement -

​இந்திய டீமின் கேப்டனாக செயல்பட்டு உலகக்கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவ், தொடர் வெற்றிகளை பெற்ற போதிலும் அடுத்தடுத்த தொடர்களுக்கான டீமில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

​35 வயதாகும் சூர்யகுமார் யாதவ், ஐபிஎல் தொடரில் சுமாரான பெர்ஃபார்மன்ஸ் அளித்திருந்தாலும், சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய டீமை சிறப்பாக வழிநடத்தி ஆசிய கப் மற்றும் வேர்ல்ட் கப் ஆகிய தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார்.

​டீமிலிருந்து நீக்கப்பட்டது குறித்து சூர்யகுமார் யாதவ் பேசும்போது, “நான் 40 முதல் 50 நாட்கள் வரை வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருந்தேன், மேலும் என்ன செய்வதென்றே தெரியாமல் கம்ப்ளீட் ஷாக்கில் இருந்தேன். இனிமேல் கிரிக்கெட் விளையாட வேண்டுமா இல்லையா என்று என் மைண்டில் பல கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. அப்போது என் மனைவி என்னிடம் வந்து, ’20 வருடங்களுக்கு முன்பு இந்த கேமை ஏன் விளையாடத் தொடங்கினீர்கள் என்று யோசித்துப் பாருங்கள், அந்த பேஷனை மீண்டும் கொண்டு வாருங்கள்’ என்று கூறி என்னை மோட்டிவேட் செய்தார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து தனது வருத்தத்தைப் பகிர்ந்த சூர்யகுமார் யாதவ், “அடுத்த இரண்டு வருடங்களுக்கு டீமை வழிநடத்தவும், ஒலிம்பிக்ஸ் மற்றும் அடுத்தடுத்த வேர்ல்ட் கப் தொடர்களுக்குத் தயராகவும் நான் பிளான் செய்திருந்தேன். இரண்டு வருடங்களாக நாம் எந்த ஒரு சீரிஸையும் இழக்கவில்லை, வேர்ல்ட் கப்பையும் வென்றிருக்கிறோம் எனும் போது எல்லாம் சரியாகச் செல்லும் போது ஏன் சேஞ்ச் செய்ய வேண்டும் என்று யோசித்தேன். ஆனால் செலக்டர்ஸ் எடுத்த இந்த டிசிஷனை பார்த்து நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by