இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 22ஆம் தேதி முதல் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. சூரிய குமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த தொடரில் பங்கு பெறுவதற்கு தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் வெறும் 5 சிக்சர்கள் அடிப்பதன் மூலமாக புதிய சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து டி20
இந்திய அணியின் கேப்டனாக விளங்கிய ரோஹித் சர்மா டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கையோடு டி20 தொடரில் ஓய்வினை அறிவித்தார். அவருக்கு பிறகு தற்போது சூரியகுமார் யாதவ் இந்திய டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியில் கேப்டனாக அவரது செயல்பாடு சிறப்பானதாக இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் தனது அபார பங்களிப்பை இந்திய அணிக்கு கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக வருகிற 22ஆம் தேதி முதல் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் முதலாவது டி20 போட்டி வருகிற 22ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதில் கில், ரிஷப் பண்ட் போன்ற முன்னணி வீரர்கள் இந்த தொடரில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் வெறும் 5 சிக்சர்கள் அடிப்பதன் மூலமாக ஒரு சிறப்பான சாதனை ஒன்றை படைக்க இருக்கிறார்.
இந்திய அணியின் கேப்டன் படைக்கப் போகும் சாதனை
அதாவது இதுவரை 78 போட்டிகளில் விளையாடியுள்ள சூரியகுமார் யாதவ் 145 சிக்சர்கள் அடித்திருக்கிறார். இன்னமும் 5 சிக்சர் அடித்தால் 100க்கும் குறைவான டி20 போட்டிகளில் 150 சிக்ஸர்கள் அடித்த முதல் ஐசிசி வீரர் என்ற பெருமையை சூரியகுமார் யாதவ் பெறுவார். அதாவது டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணி வீரர் குறைந்த இன்னிங்ஸ்களில் 150 சிக்ஸர்கள் அடிக்கும் முதல் வீரர் என்கிற சாதனையை படைப்பார். இதற்கு முன்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வீரர் இந்த சாதனையை படைத்துள்ள நிலையில் அவரது அணி டெஸ்ட் அந்தஸ்து பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:108 ரன் அடித்தும்.. கேள்விக்குறி ஆகும் சாம்சனின் இடம்.. காரணம் என்ன?. சாம்பியன்ஸ் டிராபி 2025
இதற்கு அடுத்ததாக நியூசிலாந்து அணி வீரர் மார்ட்டின் குப்தில் 105 டி20 போட்டிகளில் விளையாடி இந்த மைல் கல்லை அடைந்துள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 119 போட்டிகளில் விளையாடி 150 சிக்சர்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதனை சூர்யா நிகழ்த்தினால் உலகின் முதல் வீரராக மாறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.