108 ரன் அடித்தும்.. கேள்விக்குறி ஆகும் சாம்சனின் இடம்.. காரணம் என்ன?. சாம்பியன்ஸ் டிராபி 2025

0
336

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள நிலையில் இதற்காக அனைத்து அணிகளும் பதினைந்து பேர் கொண்ட அணியை அறிவித்து வரும் நிலையில் இந்திய அணி விரைவாக அறிவிக்க உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய டி20 அணியில் நிரந்தர பேட்ஸ்மேனாக தடம் பதித்துள்ள சஞ்சு சாம்சன் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெற மாட்டார் என்று அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்துள்ளது.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர்

கடைசியாக 2017ஆம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய நிலையில் தற்போது இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்தத் தொடரில் கலந்து கொள்ள உள்ள இந்திய அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை மும்பையில் நடைபெறுகிற முக்கிய கூட்டத்தில் தேர்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நன்றாக செயல்பட்ட கேஎல் ராகுல் இந்த தொடரில் இடம் பெறுவார் என்று பிசிசிஐ இதற்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் மூன்று வடிவ தொடர்களிலும் விளையாடி வரும் ரிஷப் பண்ட் இந்த தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக இடம் பெறுவார் என்று தெரிகிறது. இந்த நிலையில் இந்திய அணியில் டி20 தொடரில் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுப்பவர் சஞ்சு சாம்சன்.

- Advertisement -

சஞ்சு சாம்சன் இடம் கேள்விக்குறி

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடரில் சாம்சன் அதிரடியாக விளையாடி தனது சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தியதோடு டி20 அணியில் நிரந்தர இடம் பிடித்து விட்டார். இருப்பினும் ஒரு நாள் தொடரிலும் கடைசியாக இதே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக 108 ரன்கள் குவித்துள்ளார். இதுவரை 16 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள சாம்சன் 510 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பங்குபெற மாட்டார் என்று தற்போது தகவல் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க:என்ன விதி இது.? ஒரு வீரருக்கு 150 கிலோவுக்கு என்ன தேவை.. பிசிசிஐ விதித்த விசித்திர விதி – ஆகாஷ் சோப்ரா கேள்வி

சாம்சன் கடைசியாக விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் தொடரில் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாடாத நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவரது பெயர் இடம் பெறவில்லை என்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மற்ற இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான துருவ் ஜூரேல் மாற்றும் இசான் கிசான் ஆகியோரில் துருவ் ஜூரேல் முதல் தேர்வாக இருப்பார் என்று தெரிகிறது. ஏனென்றால் இஷான் கிஷான் சமீப காலமாக இந்திய சர்வதேச அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -