இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தற்போது தான் சரியாக இரண்டு எடுக்கவில்லை எனவும் தான் திரும்பி வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்தும் பேசியிருக்கிறார்.
சமீபத்தில் அகமதாபாத் பல்கலைக்கழகம் ஒன்றில் பேசிய சூரியகுமார் யாதவ் தான் தற்போது ரன்கள் சரியாக எடுக்காமல் இருப்பது குறித்து மிகவும் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது தனக்கு கற்றுக்கொள்ளும் காலமாக இருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
இந்திய டி20 அணியின் துணை கேப்டன் கில் சரியாக ரன்கள் எடுக்காத காரணத்தினால் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அவரைப் போலவே ரன்கள் எடுக்காத கேப்டன் சூரியகுமார் யாதவ் அணியில் தொடர்கிறார். சில இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இவரையும் இந்திய அணியை விட்டு நீக்க வேண்டும் என்று கூறி வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “ஒரு வீரருக்கு எப்பொழுதும் நல்ல நேரம் மட்டுமே இருக்காது. அதே நேரத்தில் எப்பொழுதும் கடினமான நேரத்தை தாங்கி கொண்டு இருக்கிறேன் என்று சொல்ல வரவில்லை. இது கற்றுக் கொள்வதற்கான ஒரு நேரம்தான். சில நேரம் இப்படி ஒரு கட்டம் வரும். அப்பொழுது இது நாம் கற்றுக் கொள்ளும் நேரம் என நமக்கே தோன்றும். இப்போது அப்படியான நேரம்தான் எனக்கு நடக்கிறது”
“தற்போது என்னை காப்பாற்றிக் கொண்டிருப்பது அணியில் உள்ள மற்ற 14 வீரர்கள்தான். நான் சிறப்பாக விளையாடும் ஒரு நாளில் என்ன நடக்கும் என்பதை அவர்கள் நன்றாகவே அறிவார்கள். அதைப் பற்றி நீங்களும் அறிந்திருக்கிறீர்கள் என்று நான் நம்புகிறேன்”
இதையும் படிங்க : நம்மள பார்த்து ஆஸி சிரிக்குது.. மூணு வருஷம் ஆணவத்துக்கு வந்த தண்டனை – மைக்கேல் வாகன் வருத்தம்
“நான் மிகவும் பாசிட்டிவாக இருந்து கடுமையாக உழைக்கிறேன். போது உங்களுக்கு தேர்வு சரியாக செல்லவில்லை என்றால் நீங்கள் படிப்பதை நிறுத்தி விடுவீர்களா? மேற்கொண்டு கடுமையாக உழைத்துப் படித்து முன்னேறுவீர்கள்தானே. அதுபோலத்தான் நானும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.