நம்மள பார்த்து ஆஸி சிரிக்குது.. மூணு வருஷம் ஆணவத்துக்கு வந்த தண்டனை – மைக்கேல் வாகன் வருத்தம்

0
72
Vaughan

நடப்பு ஆசஸ் டெஸ்ட் தொடரில் முதல் மூன்று போட்டிகளையும் தோற்று ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து அணி பரிதாபமாக தொடரை இழந்திருக்கிறது. இது குறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் மிகவும் வேதனையுடன் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளும் சேர்த்து மொத்தமாக 11 நாட்கள் மட்டுமே நடந்திருக்கிறது. இந்த 11 நாளில் மிக வேகமாக ஆஸ்திரேலியாவிடம் கௌரவத்துக்கு விளையாடும் டெஸ்ட் தொடரான ஆசஸ் தொடரை இங்கிலாந்து இழந்து இருப்பது பெரிய விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

அகந்தைக்கு கிடைத்த அடி

இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது ” தற்போது இந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் இங்கிலாந்து அணுகுமுறையின் தோல்வி கடுமையாக வெளிப்பட்டு விட்டது. இந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து வரலாற்றை தேட வேண்டிய அவசியமே கிடையாது. நிச்சயம் இதற்குப் பிறகு பலருடைய பதவி பறிபோகப்போவது உண்மை. 11 நாட்களுக்குள் தொடரை இழந்தது ஆஸ்திரேலியாவில் அடைந்த மிக மோசமான தோல்விகளில் ஒன்றாக நான் நினைவு வைத்திருப்பேன்”

“கடந்த மூன்று ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் ஒரு அகந்தை இருந்து வந்தது. அதனால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் இதை அடக்க வேண்டும் என்று நினைத்தார்கள். இந்த சுற்றுப்பயணம் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய பணிவை கற்றுக் கொடுத்திருக்கிறது”

- Advertisement -

ஆஸ்திரேலியர்கள் சிரிக்கிறார்கள்

” தற்போது ஆஸ்திரேலியர்கள் இங்கிலாந்து அணி விளையாடி தோல்வி அடைந்த முறையை பார்த்து சிரிக்கிறார்கள். ஏனென்றால் இவ்வளவு திறமையான வீரர்கள் இருந்தும் இங்கிலாந்து இவ்வளவு பலவீனமான அணியாக இருப்பதை அவர்களால் நம்ப முடியவில்லை”

இதையும் படிங்க : ஒரே ஒரு இழப்புனால.. இனி கிரிக்கெட்டே வேணாம்னு இருந்தேன்.. என்கிட்ட எல்லாத்தையும் பறிச்சுருச்சு – ரோஹித் சர்மா

” இங்கிலாந்தின் இப்படிப்பட்ட அணுகுமுறையால் ஆஸ்திரேலியாவில் வெல்ல முடியும் என கடந்த மூன்று ஆண்டுகளாக இவர்களுக்கு புகுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் ஆஸ்திரேலியாவில் வென்ற எல்லோரும் கடுமையாக உழைக்கத் தயாராக இருந்தவர்கள்தான். நான் சொல்வது ஒன்றுதான் மீதி இரண்டு போட்டிகளில் ஒன்றை வென்றாலும் நல்லதுதான். ஏனென்றால் கடந்த 16 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியை கூட வெல்லவில்லை. எனவே நடந்ததை விட்டுவிட்டு இதை நோக்கி இங்கிலாந்து களமிறங்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -