அஷுதோஷ் சர்மா என்னை மாதிரி விளையாடல.. நான் தான் அவர் மாதிரி விளையாட நினைக்கிறேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி

0
134
Surya

நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு காயத்தின் காரணமாக சில போட்டிகளில் சூரியகுமார் யாதவ் விளையாடவில்லை. பின்பு திருப்பி வந்த அவர் பழைய முறையில் மிகச் சிறப்பாக விளையாடுகிறார். நேற்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 53 பந்தில் 78 ரன்கள் குவித்தார். மேலும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் அசுதோஸ் சர்மாவை பாராட்டி பேசி இருக்கிறார்.

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சூரியகுமார் மூன்றாவது விக்கெட்டுக்கு வந்து மிகச் சிறப்பான முறையில் விளையாடினார். அதிரடியாக விளையாடும் ரோஹித் சர்மா சூரிய குமாருக்கு ஒத்துழைப்பு கொடுத்து ஒரு முனையில் மெதுவாக விளையாடும் அளவுக்கு அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் நான்கு விக்கெட்டை 14 ரன்களுக்கும், 7 விக்கெட்டுகளை 111 ரன்களுக்கும் இழந்தது. இதன் காரணமாக அந்த அணி எளிதாக தோல்வியடைந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த வீரரும் நேற்றைய போட்டி அந்த அளவிற்கு செல்லும் என்று எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

இந்த நிலையில் உள்ளே வந்த அசுத்தோஸ் ஏழு மெகா சிக்ஸர்களை விளாசி வெறும் 28 பந்துகளில் 61 ரன்கள் குவித்து ஆட்டத்தை மொத்தமாக பஞ்சாப் கிங்ஸ் பக்கம் திருப்பி விட்டார். ஒரு கட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிர்ச்சி தோல்வியடைய கூடிய நிலையில் இருந்தது. கடைசியில் தட்டு தடுமாறி அந்த அணி ஒன்பது ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அசுதோஸ் சர்மா விளையாடிய விதம் குறித்து பேசி இருக்கும் சூரியகுமார் யாதவ் கூறும்பொழுது “அசுதோஸ் சின்ன சூரியகுமார் கிடையாது. அவர் தனது திறமையை அற்புதமாக வெளிப்படுத்தினார் என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அவர் விளையாடிய விதத்தில் போட்டியை வென்று விட்டார் என்று நான் நினைத்தேன். நேற்று அவர் விளையாடியது போலத்தான் ஒரு கேம் சேஞ்சராக நானும் விளையாட வருகிறேன். அவர் பேட்டிங் செய்வதை மிகவும் வேடிக்கையாக பார்த்தேன்.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ராவுக்கே இப்படி சம்பவம் பண்ணி யாரையும் பார்த்ததில்ல.. பஞ்சாப் பையன் வேற லெவல் – ஜாகிர் கான் பேச்சு

எங்களுக்கு எதிரான போட்டியின் போது அவர்கள் வெற்றி பெற வேண்டும் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் அவர் பேட்டிங் செய்த விதத்தை நான் ரசித்தேன். அவர்கள் 14 ரன்களுக்கு நான்கு விக்கெட்டை இழந்த பொழுது நான் நிம்மதி அடைந்தேன். ஆனால் அவர்களுடைய கீழ் வரிசை பேட்ஸ்மேன் மிகச் சிறப்பாக விளையாடி எல்லாவற்றையும் மாற்றினார்கள்” என்று கூறி இருக்கிறார்.