இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தனக்காக உலகக் கோப்பையை வென்று தர முடியுமா? என இஷான் இஷானிடம் தான் கேட்டதாக கூறியிருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலக கோப்பையை இந்திய அணி சூரியகுமார் யாதவ் தலைமையில் வென்றது. இந்த அணியில் இரண்டாவது விக்கெட் கீப்பராக இடம் பெற்று இருந்த இஷான் கிஷான், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உலகக் கோப்பை பிளேயிங் லெவனினும் இடம் பிடித்தார்.
டி20 உலகக் கோப்பை இந்திய அணிக்கு திடீரென இஷான் கிஷான் வெளியிலிருந்து தேர்வு செய்யப்பட்டார். இந்த வருடம் அவர் தலைமையிலான ஜார்கண்ட் அணி உள்நாட்டு டி20 தொடர் சையத் முஸ்தாக் அலி டிராபியை வென்று இருந்தது. மேலும் இந்த தொடரில் அதிக ரன் எடுத்த வீரராக கேப்டன் இஷான் கிஷான் இருந்தார்.
இதைத்தொடர்ந்து கில் தடுமாறி வந்ததால் இஷான் கிஷானை அதிரடியாக தேர்வு செய்தார்கள். மேலும் தான் தேர்வு செய்யப்பட்டதற்கு நியாயமாக அவர் 193 ஸ்ட்ரக்ரேட்டில் 317 ரன்கள் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பையில் குவித்திருக்கிறார்.
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும் பொழுது “டி20 உலகக் கோப்பை இந்திய அணியை தேர்வு செய்து கொண்டிருந்தார்கள். அப்போது இஷான் கிஷான் தேர்வு செய்யப்படுவார் என எனக்கு தெரியும். எனவே நான் அவரை தொலைபேசியில் அழைத்து ‘எனக்காக டி20 உலக கோப்பையை வென்று தர முடியுமா?’ என்று கேட்டேன். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து நம்புங்கள் நான் செய்து காட்டுகிறேன் என்று அவர் சொன்னார்”
இதையும் படிங்க : பும்ரா இங்கிலாந்துல இருந்திருந்தா உலகக்கோப்பை எங்களுக்கு தான்.. அவர் மெஸ்ஸி ரொனால்டோ மாதிரி – மைக்கேல் வாகன் பேச்சு
“பிறகு அவர் தான் சொன்னபடியே நடந்து கொண்டு உலகக் கோப்பை வெற்றியில் முக்கிய பங்கை வகித்திருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் சர்வதேச கிரிக்கெட் விளையாட வில்லை. இருந்த போதும் அவர் உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு சென்று கடினமாக உழைத்து மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி வந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.