பும்ரா இங்கிலாந்துல இருந்திருந்தா உலகக்கோப்பை எங்களுக்கு தான்.. அவர் மெஸ்ஸி ரொனால்டோ மாதிரி – மைக்கேல் வாகன் பேச்சு

0
10
Vaughan

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பும்ரா தங்கள் அணியில் இருந்திருந்தால் தாங்களே உலகக் கோப்பையில் வெற்றி பெற்று இருப்போம் என்று கூறியிருக்கிறார்.

இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மார்க் புட்சர், அலைஸ்டர் குக், டேவிட் லாயர் போன்ற வீரர்கள் கலந்து கொண்ட உரையாடலில் மைக்கேல் வாகன் இந்த கருத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் அவரே தான் பார்த்ததில் மிகச்சிறந்த பவுலர் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

பும்ரா அசத்தல்

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக பூம்ரா இருந்தார். இந்த போட்டியில் பும்ரா கடைசியில் வீசிய இரண்டு ஓவர்கள்தான் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தன.

மேலும் இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக நான்கு விக்கெட் கைப்பற்றி ஆட்டநாயகன் விருதையும் வென்றார். இத்துடன் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராகவும் உயர்ந்தார். எனவே அவர் குறித்து வெளியில் இருந்து நிறைய பாராட்டுக்கள் வந்த வண்ணம் உள்ளது.

- Advertisement -

அவரே சிறந்தவர்

மைக்கேல் வாகன் முன்னாள் வீரர்களுடன் கலந்து கொண்ட நிகழ்வில் இது குறித்து பேசும் பொழுது “ஒருவேளை இங்கிலாந்து அணியில் பும்ரா இருந்திருந்தால் நிச்சயமாக இந்திய அணியை தோற்கடித்து இங்கிலாந்து டி20 உலகக் கோப்பையை வென்றிருக்கும். அந்தப் போட்டியில் அவர்தான் இரண்டு அணிகளுக்கும் வித்தியாசமான வீரராக இருந்தார்”

இதையும் படிங்க :எனக்கு சூப்பர் ஸ்டார் வேண்டாம்.. சூப்பர் டீம்தான் வேணும்.. நான் அதை செய்வேனு நம்புறேன் – கம்பீர் பேச்சு

“மேலும் நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்ததில் இருந்து அவர்தான் தலைசிறந்த பவுலர் என்று நினைக்கிறேன். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் அவர் எப்படி பந்து வீசினார் என நான் நேரில் பார்த்தேன். மேலும் ரொனால்டோ மெஸ்ஸி போல அவர் மிகவும் தனித்துவமான திறமை கொண்டவர்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -