இந்திய கிரிக்கெட்

சிராஜுக்கு குடுக்காம..19வது ஓவர் ரிங்குவை வீச வச்ச காரணம் இதுதான்.. சூரியகுமார் யாதவ் ருசிகர தகவல்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் எடுத்தாலே வெற்றி என்ற நிலைமையில் இருந்த இலங்கை அணியை சூரியகுமார் மற்றும் ரிங்கு சிங்கின் இறுதி கட்ட மாயாஜால ஓவர்களால் போட்டி சமனில் முடிந்ததை அடுத்து சூப்பர் ஓவரில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.

- Advertisement -

முன்னணி வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும்போது கடைசி இரண்டு ஓவர்களில் சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்திய விதம் குறித்து சூரியகுமார் யாதவ் பேசி இருக்கிறார்.

ஏற்கனவே இரண்டு போட்டியிலும் தோல்வியடைந்து தொடரை இழந்த இலங்கை அணி மூன்றாவது போட்டியில் ஆறுதல் வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியது. இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இலங்கையின் சிறப்பான பந்து வீச்சினால் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் குவித்தது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணிக்கு வழக்கம் போலவே சிறப்பான தொடக்கம் கிடைத்தது.

15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் குவித்து நல்ல நிலையில் இருந்த போது மேற்கொண்டு 30 பந்துகளில் 30 ரன்கள் சேர்ப்பதற்குள் ஏழு விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டுமே குவித்தது. 19 மற்றும் 20வது ஓவரை ரிங்கு சிங் மற்றும் சூரியகுமார் யாதவ் வீச இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இந்த நிலையில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு மீதம் ஓவர்கள் இருக்க சுழற் பந்துவீச்சை பயன்படுத்தியதற்கான காரணம் குறித்து சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எப்போதுமே 20வது ஓவருக்கு முன் 19-வது ஓவர்தான் ஆட்டத்தின் கடினமான பகுதி. சிராஜ் மற்றும் சிலரது ஓவர்கள் மீதம் இருந்தது. இருந்தாலும் அந்த விக்கெட்டுக்கு ரிங்கு சிங் பொருத்தமாக இருப்பார் என்று நான் உணர்ந்தேன். ஏனென்றால் அவர் வலைகளில் சிறப்பாக பந்து வீசி இருக்கிறார். அதனால்தான் நான் அந்த முடிவை எடுத்து அவருக்கு ஓவரை கொடுத்தேன்.

இதையும் படிங்க: இந்திய டீம்ல இப்போ இவங்க 2 பேர பார்த்தாலே.. கங்குலி சச்சின் தான் ஞாபகம் வர்றாங்க.. உத்தப்பா பாராட்டு

மேலும் இந்திய கிரிக்கெட்டுக்கு 19-வது ஓவர் எப்போதுமே கஷ்டம் என்று தெரியும். (சிரித்துக் கொண்டே கூறுகிறார்) அதனால்தான் ரிங்குவிடம் அந்த பொறுப்பை கொடுத்தேன். வலது கை பந்துவீச்சாளர் இடது கை பேட்ஸ்மேனுக்கு எப்போதுமே கடினமாக இருப்பார். எனக்கு மேலும் ஒரு பந்துவீச்சு ஆப்ஷன் இருந்ததால் அவர் தனது திறமையை பயன்படுத்தி 20வது ஓவரை வீச எனது வேலையை எளிதாக்கினார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts