இந்திய டீம்ல இப்போ இவங்க 2 பேர பார்த்தாலே.. கங்குலி சச்சின் தான் ஞாபகம் வர்றாங்க.. உத்தப்பா பாராட்டு

0
1515

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கில் மற்றும் ஜெய்ஸ்வால் குறித்து முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி விளையாடிக் கொண்டிருந்தபோதே கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தங்களது திறமையை நிரூபித்து அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாக விளையாடினர். கில் இந்திய அணியில் ஏற்கனவே தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்க, ஜெய்ஸ்வால் ஐபிஎல் தொடர்களில் மிகச் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தினார்.

இந்த சூழ்நிலையில் சமீபத்தில் இந்திய அணி டி20 உலக கோப்பை வென்றதோடு சீனியர் வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவர்களது இடத்தை நிரப்ப கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் கிடைத்த வாய்ப்பை மிகத் திறமையாக பயன்படுத்திக் கொண்டு வருகின்றனர். சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்தத் தொடக்க ஜோடி அற்புதமான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தியது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை பார்க்கும்போது கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோர்தான் எனக்கு நினைவுக்கு வருகிறார்கள் என்றும், இவர்களது இந்த இடது வலது காம்பினேஷன் கூட்டணி அவர்கள் விளையாடிய விதத்தை தனக்கு நினைவூட்டுவதாக கூறியிருக்கிறார்.

இது குறித்து உத்தப்பா விரிவாக கூறும்போது “கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோரை பார்க்கும்போது சச்சின் டெண்டுல்கர் மற்றும் கங்குலி ஆகியோர் விளையாடுவதை எனக்கு நினைவூட்டுகிறார்கள். அவர்களது உத்திகள் ஒருவரை ஒருவர் பாராட்டும்படி அமைந்துள்ளது. மேலும் இருவரும் ஒன்றாக பேட்டிங் செய்ய வெளியே வரும்போது நான் அவர்களைத்தான் பார்க்கிறேன்.

இதையும் படிங்க:சூர்யா பாய் சொல்லிதான் அந்த ஸ்பெஷல் வேலையை செஞ்சேன்.. ஆனா அவர் வச்ச டிவிஸ்ட்ட எதிர்பார்க்கல – ரியான் பராக் பேச்சு

மேலும் ஜெய்ஸ்வாலுக்கு ஒரு நாள் கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்கும்போது அவர் அந்த இடத்தை கச்சிதமாக பிடித்துக் கொள்வார். ஏனென்றால் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் விளையாடிய விதம் அவருக்கு உதவும். ஒருநாள் கிரிக்கெட் மற்ற இரண்டு வடிவ தொடர்களை விட அவருக்கு எளிதாக இருக்கும். ஏனென்றால் இந்த உலகில் அவரால் எங்கு வேண்டுமானாலும் ரன்கள் குவிக்க முடியும் என்ற மனநிலை அவருக்கு இருக்கும்” என்று கூறி இருக்கிறார். கில் மற்றும் ஜெய்ஸ்வால் கூட்டணி தொடக்க ஆட்டக்காரர்களாக 64.50 சராசரி வைத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -