ஆஃப்கானிஸ்தான் தொடருக்கு முன்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து இந்திய முன்னாள் வீரர் தனது வருத்தத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
துலீப் டிராபி தொடரில் ஈஸ்ட் ஜோன் அணிக்காக விளையாடிய முகமது ஷமி மிகச் சிறப்பான பவுலிங் ஸ்பெல் வீசி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
தொடர்ந்து சிறப்பாக பந்துவீசி வரும் போதிலும் அவர் இந்திய நேஷனல் டீமில் இடம் பெறாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர் பேசும்போது, “ஷமி மிகவும் அற்புதமாக பந்துவீசி பேட்டர்களுக்கு பிரஷர் கொடுத்தார், இந்த அளவிற்கும் அவர் தன்னை மீண்டும் நிரூபிக்க வேண்டிய நிலையில் இருப்பது அசிங்கமானது. அவரைப் போன்ற திறமையான குவாலிட்டி பிளேயர் இந்திய டீமில் இல்லாதது எனக்கு பெரும் வேதனையை அளிக்கிறது” என்று கூறி இருக்கிறார்.
மேலும் ஜாஃபர் கூறும்போது, “நியூசிலாந்து தொடருக்கான டீம் செலக்சன் வரை நாம் காத்திருந்து செலக்டர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும், அவரைப் போன்ற கலையை அறிந்த பவுலர்கள் மிகச் சிலரே உள்ளனர்” என்று கூறி முடித்தார்.