இந்திய கிரிக்கெட்

ஹர்ஷித் ராணாவை ஆல்ரவுண்டர் ஆக்க கம்பீர் ரொம்ப கஷ்டப்படுறார்.. டீம் செலேக்சனே தப்பு – பத்ரிநாத் விமர்சனம்

​ஆஃப்கானிஸ்தான் தொடருக்கு முன்பாக பிட்னஸ் பிரச்சினைகள் இருக்கும் போதிலும் ஆல் ரவுண்டர்களை தேர்வு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வரும் இந்திய ஹெட் கோச் கௌதம் கம்பீரின் செலக்சன் குறித்து முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

- Advertisement -

​இந்திய டி20 டீமில் வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய மூவரும் ஆல் ரவுண்டர்களாக சேர்க்கப்பட்டிருப்பது குறித்து சிஎஸ்கே முன்னாள் பிளேயர் சுப்ரமணியம் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

​இதுகுறித்து பத்ரிநாத் பேசும்போது, “இந்த மூன்று பேருமே ஆல் ரவுண்டர் கேட்டகிரியில் வருகிறார்கள். இதில் சுந்தர் மற்றும் நிதிஷ் இருவருமே உறுதியான ஆல் ரவுண்டர்கள் தான். ஆனால் ஹர்ஷித் ராணாவை ஆல் ரவுண்டராக மாற்றுவதற்கு அவர்கள் மிகவும் தீவிரமாக முயற்சி செய்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து அவர் பேசும்போது, “கௌதம் கம்பீர் எப்படியாவது ஆல் ரவுண்டர்களையும் மல்டி டைமன்ஷனல் கிரிக்கெட்டர்களையும் உருவாக்கி விட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார். அந்த அவசரத்தினால் தான் இவர்கள் இன்ஜுரி இஷுஸுடன் இருக்கும் போதும் தொடர்ச்சியாக பிக் செய்யப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

​மேலும் பத்ரிநாத் பேசும்போது, “ஆனால் அவர்களால் அடுத்த சரியான ஆல் ரவுண்டரை உருவாக்க முடியவில்லை. ஹார்திக் பாண்டியாவுக்கு பிறகு நிரூபிக்கப்பட்ட ஆல் ரவுண்டர் என்று யாருமே இல்லை. பிட்னஸ் டெஸ்ட்டில் தேறவில்லை என்றாலும் இவர்கள் செலக்ட் செய்யப்படுவதற்கு இந்த அவசரமே காரணம்” என்று கூறி முடித்தார்.

- Advertisement -
Published by