22 பந்தில் அரைசதம் அடித்த சூர்யகுமார் யாதவ், “ஜஸ்ட் மிஸ்ல தப்பிச்ச ரோகித் சர்மா” – காரணம் தெரியுமா?

0
163

22 பந்துகளில் அரைசதம் அடித்ததன் மூலம் டி20 போட்டிகளில் ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்திருக்கிறார் சூரியகுமார் யாதவ்.

ஆசியக் கோப்பைத் தொடரின் 15வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் ஏ, குரூப் பி என்று பிரிக்கப்பட்டு தலா மூன்று அணிகள் என மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன.

- Advertisement -

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஹாங்காங் மற்றும் இந்தியா இரு அணிகளும் மோதினர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து 192 ரன்கள் அடித்திருந்தது. முன்னாள் கேப்டன் விராத் கோலி பொறுப்புடன் விளையாடி 44 பந்துகளில் 59 ரன்கள் அடித்திருந்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சூரியகுமார் யாதவ், வந்த வேகத்திலேயே அதிரடியை துவங்கினார்.

ஹாங்காங் பந்துவீச்சாளர்களின் பந்தை மைதானத்தின் நான்கு திசைகளிலும் பறக்கவிட்டு ரன் மழை பொழிந்தார் சூரியகுமார். சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளாக விலாசி கொண்டிருந்த சூரியகுமார் யாதவ், 22 பந்துகளில் அரைசதம் கடந்து புதிய சாதனை படைத்தார். டி20 போட்டிகளில் அதிவேகத்தில் அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் தற்போது ரோகித் சர்மாவின் சாதனையை இவர் சமன் செய்திருக்கிறார்.

இன்னிங்ஸ் முடிவில் ஆட்டமிழக்காமல் இருந்த சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 68 ரன்கள் அடித்திருந்தார். அதன் பிறகு பேட்டிங் செய்த ஹாங்காங் அணி இந்தியாவின் பந்துவீச்சை நன்றாக எதிர்கொண்டு எளிதாக விட்டுக் கொடுக்காமல், 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து 152 ரன்கள் எடுத்திருந்தது. கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட ஹாங்காங் அணி பலமிக்க இந்திய அணிக்கு எதிராக போராடிய விதம் பலரின் பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது.

- Advertisement -

டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்

12 – யுவராஜ் v இங்கிலாந்து, 2007

18 – ராகுல் v ஸ்காட்லாந்து, 2021

19 – கம்பீர் v இலங்கை, 2009

20 – யுவராஜ் v ஆஸ்திரேலியா, 2007

20 – யுவராஜ் v இலங்கை, 2009

21 – கோஹ்லி v மேற்கிந்திய தீவுகள், 2019

22 – தவான் v இலங்கை, 2016

22 – ரோஹித் v வெஸ்ட் இண்டீஸ், 2016

22 – சூரியகுமார் யாதவ் v ஹாங்காங், 2022

ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் இன்னும் சில பந்துகளுக்கு முன்னரே அரைசதம் அடித்திருக்கலாம். அந்த வாய்ப்பை துரதிஷ்டவசமாக தவறவிட்டார். அப்படி நேர்ந்திருந்தால் ரோகித் சர்மா, தவான், விராட் கோலி ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்த பட்டியலில் இன்னும் சில இடங்கள் முன்னேறி சென்றிருக்கலாம்.

ஆசிய கோப்பை தொடரில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்த சுற்றான சூப்பர் போர்ட் சுற்றுக்கு முன்னேறி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.