ஆஸி., பவுலர்கள் கதறவேண்டுமா? முதல் டெஸ்டின் பிளேயிங் லெவனில் சூரியாகுமாரை ஆடவைங்க – ரவி சாஸ்திரி கணிப்பு!

0
387

முதல் டெஸ்ட் போட்டியின் பிளேயிங் லெவனில் சூரியகுமார் யாதவ் இருந்தால் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துவார் என்று கணித்துள்ளார் ரவி சாஸ்திரி.

2017ஆம் ஆண்டிற்கு பிறகு இந்தியாவில் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 1ஆம் தேதி இந்தியாவிற்கு வந்தடைந்து தீவிர பயிற்சியில் ஆஸ்திரேலியா அணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.

- Advertisement -

எட்டு வருடங்களாக இந்தியாவிற்கு எதிராக டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி வெல்லவில்லை. இம்முறை அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்கிற முனைப்பிலும் அவர்கள் பல்வேறு நுணுக்கங்களுடன் பயிற்சி செய்து வருகின்றனர்.

அதே நேரம் இந்திய அணியினரும் நாக்பூரில் உள்ள பயிற்சி மைதானத்தில் பிப்ரவரி 3ஆம் தேதியிலிருந்து தீவிர பயிற்சி செய்து வருகின்றனர். இந்த அணியில் முதல்முறையாக சூரியகுமார் யாதவ் மற்றும் இஷான் கிஷன் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். ரிஷப் பண்ட் இல்லாத காரணத்தினால் இவர்களை உள்ளே எடுத்து வந்திருக்கிறது.

ரிஷப் பன்ட் இல்லை என்பதால் பிளேயிங் லெவனில் சூரியகுமார் யாதவ் இருந்தால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கணித்திருக்கிறார் ரவி சாஸ்திரி. அவர் கூறுகையில்,

- Advertisement -

“ரிஷப் பண்ட் மிடில் ஆர்டரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அவர் இல்லாதது ஆஸ்திரேலியா அணிக்கு பலத்தை கொடுத்திருக்கும். ஆனால் அந்த இடத்தில் சூரியகுமார் யாதவ் விளையாட வைத்தால் ரிஷப் பண்ட்-க்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்துவார்.

சூரியகுமார் யாதவ், நன்றாக ஸ்வீப் ஆடக்கூடியவர். வீரர்களின் மத்தியில் இடைவெளி அறிந்து அங்கு பந்தை செலுத்தக் கூடியவர். எளிதில் சுழல் பந்துவீச்சாளர்களை கணிக்க விடமாட்டார். சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக நல்ல ரெக்கார்ட் வைத்திருக்கிறார்.

மும்பைக்காக உள்ளூர் போட்டிகளில் நிறைய விளையாடி இருக்கிறார். ஆகையால் மைதானத்தின் கண்டிஷன் அறிந்து விளையாட கூடியவர். இந்த வகையில் அவர் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும்.” என்றார்.