சூரியகுமார் ருத்ர தாண்டவம் ; சிஎஸ்கேவை பாயிண்ட்ஸ் டேபிளில் துரத்தும் மும்பை ; ஆர்சிபி-யை அசால்டாக அடித்தது!

0
7804
SKY

இன்று ஐபிஎல் தொடரில் 56வது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன!

பெங்களூர் அணி 10 போட்டியில் 10 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருக்கிறது. மும்பை அணி 10 போட்டியில் 10 புள்ளிகள் உடன் எட்டாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டிக்கான டாசில் வென்று முதலில் பந்துவீச்சை மும்பை கேப்டன் ரோகித் சர்மா தேர்ந்தெடுத்தார். துவக்காட்டக்காரராக களம் வந்த விராட் கோலி 1, அனுஜ்ராவத் 6 ரன்களில் வெளியேறினார்கள்.

இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் பாப் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி 120 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். மேக்ஸ்வெல் 33 பந்துகளில் எட்டு பவுண்டரி நான்கு சிக்ஸர்கள் உடன் 68 ரன்களும், கேப்டன் பாப் 41 பந்துகளில் ஐந்து பவுண்டரி மூன்று சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்தார்.

இதற்கு அடுத்து வந்த லோம்ரர் 1, தினேஷ் கார்த்திக் 30, கேதார் ஜாதவ் 12, ஹசரங்கா 12 ரன்கள் எடுக்க நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 199 ரன்கள் பெங்களூர் அணி எடுத்தது. பெஹரன்டாப் நான்கு ஓவர்களுக்கு 36 ரன்கள் கொடுத்து மூன்று விக்கட்டுகள் மும்பை தரப்பில் வீழ்த்தினார்.

- Advertisement -

அடுத்து விளையாடிய மும்பை அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் இஷான் கிஷான் 42, ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்து முதல் விக்கட்டுக்கு 51 ரன்கள் தந்து வெளியேறினார்கள்.

இதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த சூரியகுமார் யாதவ் மற்றும் நெகில் வதேரா இருவரும் ஆரம்பத்தில் பொறுப்புடன் விளையாடி, அதற்குப் பிறகு பெங்களூர் அணியின் பந்துவீச்சாளர்களை வதம் செய்து விட்டார்கள்.

குறிப்பாக சூரியகுமாரின் ஆட்டத்தில் அனல் பறந்தது. தான் விளையாடினால் மைதானத்தில் எப்படி இருக்கும் என்பதை அவர் இன்றைக்கு மீண்டும் காட்டினார். மொத்தம் 35 பந்துகளை மட்டும் சந்தித்த அவர் ஏழு பவுண்டரி ஆறு சிக்ஸர்களுடன் 83 ரன்களை விளாசி வெற்றியை கொத்தாக பெங்களூர் கையில் இருந்து பறித்து விட்டார். இந்த ஜோடி 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது.

இதற்கு அடுத்து வந்த டிம் டேவிட் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். இறுதியாக 16.3 ஓவரில் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது மும்பை அணி. நெகில் வதேரா ஆட்டம் இழக்காமல் 34 பந்துகளில் 52 ரன்கள், கேமரூன் கிரீன் இரண்டு ரன்கள் உடனும் களத்தில் இருந்தார்கள்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி 11 ஆட்டங்களில் ஆறாவது வெற்றியைப் பெற்று 12 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது. சென்னை அணி 11 ஆட்டங்களில் 13 புள்ளிகள் உடன் இரண்டாம் இடம் வகிக்கிறது. பதினாறு புள்ளிகள் உடன் குஜராத் முதலிடத்தில் இருக்கிறது!