ODI-ல் சரிவராத சூரியகுமார்.. T20-ல் மிரட்டுவதற்கு முக்கிய 3 காரணங்கள்!

0
15259
Surya

கிரிக்கெட்டில் ஒவ்வொரு காலகட்டத்திலும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் என அதை அணுகும் முறையில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இன்றைய நவீன கிரிக்கெட்டில் திட்டங்கள் மிகவும் கூர்மையாக்கப்பட்டு இருக்கிறது. ஒரு வீரரின் பலம் மற்றும் பலவீனங்கள் எதிரணியின் கையில் மிகத் துல்லியமாக இருக்கின்றன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தற்போதைய கிரிக்கெட் உலகத்தில் மைதானத்தைச் சுற்றி 360 டிகிரியில் விளையாட இந்தியாவின் சூரியகுமார் யாதவை விட சிறந்த பேட்ஸ்மேன்கள் யாருமே கிடையாது.

டி20 கிரிக்கெட்டில் அவரது சாதனைகளை இன்னொரு வீரர் எட்டிப் பிடிக்க முடியுமா என்பது கூட சந்தேகம்தான். 170 க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக்ரேட்டில், 47 ஆவரேஜில் அவரைப் போல் விளையாடுவது என்பது முடியாத காரியம். ஆனால் அப்படிப்பட்ட அவர் அதே வெள்ளைப் பந்தில் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் மிகவும் தடுமாற்றம் கொண்டவராக இருக்கிறார். இதற்கான மூன்று காரணங்களை பார்ப்போம்.

மனநிலை மற்றும் சுதந்திரம் :

- Advertisement -

அவர் தன்னை தன்னை பேட்டிங்கில் எப்படி வெளிப்படுத்திக் கொள்ள விரும்புகிறாரோ அவர் அப்படி விளையாடுவதற்கான சுதந்திரம் இருக்க வேண்டும். சூழ்நிலைகளைப் பார்த்து அவரால் விளையாட முடியாது. அவருடைய மனநிலை சரியாக இருக்க, அவரை அவருடைய போக்கில் சுதந்திரமாக விட வேண்டும்.

பேட்டிங் ஆர்டர் :

அவர் குறைந்தபட்சம் முதல் நான்கு இடங்களில் விளையாடக்கூடியவராக இருக்கிறார். எனவே அவருக்கு ஆறு மற்றும் ஏழாவது இடம் என்பது மிகவும் அதிகமானது. அவருடைய விளையாட்டு பாணிக்கு சரிவராதது. அவர் ஆட்டம் இழந்தாலும் கூட, அடுத்து ஆட்டத்தைக் கீழே இருப்பவர்கள் எடுத்துச் செல்கின்ற நிலை இருக்கவேண்டும். மாறாக மற்றவர்கள் ஆட்டம் இழக்க, இவரால் ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடியாது. இவரால் விக்கெட்டை பற்றி கவலை இல்லாமல் விளையாடி ஆட்டத்தை மாற்ற மட்டுமே முடியும்.

பெரிய அளவில் தேயாத பந்து:

சூரியகுமார் அதிக அளவில் பிளிக் மற்றும் ஸ்கூப் வகை ஷாட்களை விளையாடுகிறார். இதற்கு பந்து நன்றாக பேட்டுக்கு வர வேண்டும். தேய்ந்த பஞ்சு போன்ற மாறிய பழைய பந்து, நல்ல வேகத்தில் பேட்டுக்கு வராது. பந்து கொஞ்சம் புதியதாகக் கடினமாக இருக்கும் நேரத்தில்தான் பேட்டுக்கு நன்றாக வரும். எனவே சூரிய குமாருக்கு புதிய பந்தில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் தரப்பட வேண்டும். ஒரு குறுகியகால வாய்ப்பாக 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை மனதில் வைத்து, ரோகித் சர்மா இல்லையென்றால், இவரை அதிரடியாக துவக்க வீரராக கூட மாற்றலாம்!