இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கடைசி நேரத்தில் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தேர்வு ஆவது முக்கிய முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணி அடுத்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்று அந்த அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாட இருக்கிறது. தற்போது இந்தத் தொடரில் தேர்வாவதற்கு வீரர்களிடையே கடுமையான போட்டியில் நிலவி வருகிறது.
இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழு தலைவராக அகர்கர் வந்ததுமே நிறைய கெடுபிடிகள் இருக்கும் எனவும், அவர் மிகவும் கண்டிப்பாக எல்லோரிடமும் நடந்து கொள்ளக் கூடியவர் எனவும் கூறப்பட்டது. அங்கிருந்து நிறைய மாற்றங்கள் இந்திய கிரிக்கெட்டில் ஏற்பட்டன.
மிகக் குறிப்பாக இந்திய நட்சத்திர வீரர்கள் போட்டிகள் ஏதும் இல்லாவிட்டாலும் காயம் இல்லாவிட்டாலும் உள்நாட்டு போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை அகர்கர் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூலமாக உறுதி செய்து விட்டார். இதற்கு உடன்படாத இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரையும் சம்பளப்பட்டியலில் சேர்க்கக்கூடாது எனவும் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பரிந்துரை செய்து நடத்திவிட்டார். எனவே தற்போது நிறைய விஷயங்கள் இந்திய கிரிக்கெட்டில் மாறியிருக்கிறது.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணி நாளை மூன்றாவது மற்றும் கடைசிப் போட்டியில் விளையாடுகிறது. இதற்குப் பிறகு இந்திய அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தாண்டி வெள்ளைப்பந்து தொடர்களில் விளையாடுகிறது.
இந்த நிலையில் இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் அடுத்த மாதம் ஆஸ்திரேலியா செல்ல இருக்கும் அணியில் இடம் பிடிப்பதற்காக, இந்த ஆண்டு துவங்க இருக்கும் உள்நாட்டு டெஸ்ட் தொடர் ரஞ்சி டிராபியில் மும்பை மாநில அணிக்கு இரண்டாவது போட்டியில் இருந்து விளையாடுவதாக மும்பை மாநில கிரிக்கெட் அசோசியேஷன் இடம் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் அவர் ரஞ்சி கிரிக்கெட் விளையாடுவது உறுதியாகி இருக்கிறது.
இதையும் படிங்க : இந்திய அணியை ஜெயிக்க இதைத்தான் எல்லாரும் செஞ்சிருக்காங்க.. நாங்களும் செய்யப் போறோம் – நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் பேட்டி
உள்நாட்டு கிரிக்கெட்டில் நிரூபித்தால்தான் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியும் என்கின்ற சூழ்நிலையை மெல்ல மெல்ல கொண்டு வந்து விட்டார்கள். தற்போது வீரர்களும் இதற்கு உடன்பட்டு செயல்பட ஆரம்பித்திருப்பதை சூரியகுமார் யாதவ் ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்கு விளையாட இருப்பது காட்டுகிறது!