இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எப்படியான அணுகுமுறையை நியூசிலாந்து அணி கொண்டு விளையாடும்? என அந்த அணியின் தற்போதைய புதிய கேப்டன் டாம் லாதம் கூறியிருக்கிறார்.
இந்த மாதம் நியூசிலாந்து அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரில் முதல் போட்டி வருகின்ற 16ஆம் தேதி துவங்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணிக்கு எதிரான அணுகுமுறை
இந்த டெஸ்ட்டு தொடர் குறித்து பேசி இருக்கும் நியூசிலாந்து கேப்டன் டாம் லாதம் கூறும்பொழுது “நாங்கள் செய்து வரும் நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்வோம்.கேப்டனாக என்னுடைய பங்களிப்பும் இருக்கும். இந்தியாவுக்கு சென்று விளையாடுவது எப்பொழுதும் உற்சாகமானது.கொஞ்சம் சுதந்திரமாக, சிறிதும் பயப்படாமல் முயற்சி செய்து அவர்களிடம் எடுத்துச் சென்றால், அது நமக்கு நல்ல வாய்ப்பாக அமையும்”
“கடந்த காலங்களில் இந்திய அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டவர்கள் எல்லோரும் ஆக்ரோஷமாக விளையாடி இருக்கிறார்கள். குறிப்பாக பேட்டிங்கில் ஆக்ரோஷமாக இருந்திருக்கிறார்கள். நம் உள்ளே சென்று ஏதாவது நடக்கும் என்று காத்திருப்பதை விட நாமே அதிரடியாக ஆட ஆரம்பிக்க வேண்டும். அணியில் மற்ற வீரர்களுக்கும் என்ன செய்ய வேண்டும் என்கின்ற திட்டம் இருக்கிறது. இதையெல்லாம் சேர்த்து எங்களால் சரியாக செய்ய முடியும்”
சவுதி மீண்டும் திரும்பி வருவார்
மேலும் பேசிய டாம் லாதம் “பல வருடங்களாக சவுதி எங்களுக்கு மிகச் சிறப்பாக செய்து வந்திருக்கிறார். கடந்த காலத்தில் செய்ததைப் போல அவர் திரும்ப முடியாமல் போவதற்கு எந்த காரணமும் கிடையாது. அவர் பல ஆண்டுகளாக எங்களுக்கு சிறப்பாக பதிவு செய்ய இருக்கிறார். நியூசிலாந்தின் அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் அவருடைய பெயர் இருப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை”
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்னா என்னன்னு இப்ப புரியும்.. பாகிஸ்தான் சிக்கல்ல இருக்க இதுதான் காரணம் – நாசர் ஹுசைன் பேட்டி
“அவர் கேப்டனாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அவருக்கு என எப்பொழுதும் ஒரு ரோல் இருந்து கொண்டே இருக்கிறது. எல்லா நிலைகளிலும் அவர் பெரிய அனுபவம் கொண்டவர். நிச்சயம் அவரை ஊக்கப்படுத்துவோம். இந்திய தொடரில் அவர் எங்களுக்கு சிறப்பானதை கொண்டு வருவார்” என்று தெரிவித்திருக்கிறார்.