இந்திய கிரிக்கெட்

அபிஷேக் ஷர்மா பிளானை இப்படி மாத்தணும்.. இதுதான் அவரால் செய்ய முடிந்த விஷயம்.. இல்லனா கஷ்டம் – வருண் ஆரோன் ஆலோசனை

​இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் குறித்து முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் இளம் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

​வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் அபிஷேக் சர்மா நல்ல தொடக்கத்தைப் பெற்றிருந்தாலும், ரோஸ்டன் சேஸின் பந்துவீச்சில் தனது விக்கெட்டுகளைப் பறிகொடுத்து பெரிய ஸ்கோரை எட்டத் தவறினார்.

​இந்த நிலையில், அபிஷேக் சர்மா தனது பேட்டிங் நுட்பத்தில் சில மாற்றங்களைச் செய்து, மேலும் மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று வருண் ஆரோன் அறிவுறுத்தியுள்ளார்.

​இதுகுறித்து முன்னாள் வீரர் வருண் ஆரோன் பேசும்போது “அபிஷேக் சர்மா கிரீஸை விட்டு அதிகம் வெளியேறி விளையாடும் வீரர் அல்ல, ஆனால் அவர் தனது பேட்டிங்கில் பின்னோக்கிச் சென்று கிரீஸின் ஆழத்தை (depth) சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர் தனது பேட்டிங் பாணியை சற்று மாற்றி, சூழ்நிலைக்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி பெற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​தொடர்ந்து பேசிய அவர் “வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோஸ்டன் சேஸுக்கு எதிரான அவரது இரண்டு விக்கெட்டுகளும் முற்றிலும் வேறுபட்ட முறையில் வீழ்ந்தன. முதல் பந்தில் அவரை வெகுதூரம் சென்று அடிக்க முயன்றார், இரண்டாவது பந்தில் அவரை நெருக்கடிக்குள்ளாக்கினார். இந்த லென்த் மிகவும் முக்கியமானதாகும், ஸ்டம்ப்களை தாக்குபவைதான் பெரும்பாலான விக்கெட்டுகளை வீழ்த்தும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts