இந்திய கிரிக்கெட்

சூரியவன்சிக்கு அப்படியே என்னுடைய சிந்தனை.. கூட விராட் கோலியே ஆடினாலும் பிரச்சனை இல்லை – வீரேந்தர் சேவாக் பாராட்டு

​15 வயதான இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி பேட்டிங் மற்றும் அணுகுமுறை குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக் பாராட்டி பேசியுள்ளார்.

- Advertisement -

​சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பேசிய வீரேந்தர் சேவாக், இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி தற்போதைய காலகட்டத்தில் மிகச் சிறந்த ஃபார்மில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
​மேலும், முதல் பந்திலிருந்தே அதிரடியாக ஆட வேண்டும் என்ற வைபவ் சூர்யவன்ஷியின் சிந்தனை முறை, தனது ஆட்ட பாணியை நினைவுபடுத்துவதாக சேவாக் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

​இதுகுறித்து வீரேந்தர் சேவாக் பேசும்போது “சூரியவன்ஷி தனது பிரைம் ஃபார்மில் இருக்கிறார், மேலும் முதல் பந்திலிருந்தே சிக்ஸர், ஃபோர் அடிக்க வேண்டும் என்ற அவரது சிந்தனை என்னுடைய சிந்தனையை போன்றே உள்ளது. இப்போது அவருக்கு எப்போது வாய்ப்பு கிடைக்கிறது மற்றும் இந்தியாவுக்காக அவர் எத்தனை மேட்ச்கள் விளையாடுகிறார் என்பதுதான் முக்கியம்” என்று கூறி இருக்கிறார்.

​தொடர்ந்து பேசிய அவர் “நீங்கள் ஒரு ஏஜ் கேட்டகிரியில் விளையாடுகிறீர்கள் என்றால் அது அர்த்தமுள்ளதாக இருக்கும். அதாவது அண்டர் 19 என்றால் உங்கள் வயது 19க்குள் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் ஐபிஎல் அல்லது இந்தியாவுக்காக விளையாடிய பிறகு வயது முக்கியமல்ல. 38 அல்லது 40 வயதான விராட் கோலியும் விளையாடுகிறார், 15 வயதான சூர்யவன்ஷியும் விளையாடுகிறார். அப்போது பெர்ஃபார்மன்ஸ் மட்டுமே முக்கியம்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -
Published by

Recent Posts