“சூரியகுமார் பெரிய ஆள்தான்.. ஆனால் இவர்தான் விளையாடனும்!” – வீரேந்திர சேவாக் வெளிப்படையான பேச்சு!

0
1074
Surya

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் எட்டாம் தேதி மோதும் போட்டிக்காக மிகவும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.

இந்தப் பக்கத்தில் நேற்று முன்தினம் இருந்து உலகக் கோப்பை பயிற்சி போட்டிகளின் மூலம் ஆரம்பித்து இருக்கிறது. ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் இந்நாள் வீரர்கள் என உற்சாகமாக உலகக் கோப்பையை வரவேற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்திய அணி தற்பொழுது பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டு துறைகளிலும் மிகச் சிறப்பாக இருந்து வருகிறது. பந்துவீச்சு என எடுத்துக் கொள்ளும் பொழுது வேகப்பந்துவீச்சு சுழற் பந்து வீச்சு என இரண்டு துறைகளும் அதிலும் நன்றாக இருக்கிறது.

தற்போது இந்திய அணிக்கு அனைவரும் சிறந்த நிலையில் இருப்பதால் யாரை விளையாடும் அணிக்கு தேர்ந்தெடுப்பது என்கின்ற குழப்பம் இருந்து வருகிறது. இதற்கு வெளியில் இருந்து பல மாதிரியான கருத்துக்கள் இருந்து வருகிறது.

எட்டாவது இடத்தில் அஸ்வினா அல்லது சர்துல் தாக்கூரா இல்லை சமியா? என்பது ஒரு புறம் இருக்கிறது. இன்னொரு பக்கத்தில் இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சூரியகுமார் யாதவ் மூவரில் எந்த ஒருவரிடம் பெறுவார்? என்கின்ற கேள்விகள் போய்க் கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் “தற்போதைய நிலைமையில் கீழ் வரிசையில் கேஎல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் மிக உறுதியாக இருப்பார்கள். சூரியகுமார் இந்த இடத்தில் இருப்பது மிகவும் சந்தேகம்.

இசான் கிஷானின் இடம் மிக உறுதி என்று நினைத்திருந்தோம். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் அடித்த சதம் அதை மாற்றி இருக்கிறது. ஸ்ரேயாஸ் நான்காம் இடத்தில் விளையாடினால், ஐந்து மற்றும் ஆறாம் இடத்தில் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா விளையாடுவார்கள்.

இன்னொரு பக்கத்தில் கூடுதல் பேட்ஸ்மேன் ஆக இஷான் கிஷான் இல்லை சூரிய குமாரை கொண்டு வருவதாக இருந்தால், ஹர்திக் பாண்டியா 10 ஓவர்கள் முழுமையாக வீசுவாரா? என்பதை பொறுத்து அது அமைகிறது. அதே சமயத்தில் அந்த இடத்தில் ஒரு பேட்ஸ்மேன் விளையாடலாம் என்றால் அந்த இடத்தை இடது கை பேட்ஸ்மேன் என்பதற்காக இஷான் கிஷானுக்கே தரவேண்டும். சூரிய குமாருக்கு அல்ல!” என்று கூறி இருக்கிறார்!