சூரியகுமார் சதம்.. குல்தீப் 5விக்கெட்.. 95 ரன்னில் சுருண்ட தென் ஆப்பிரிக்கா.. இந்தியா மாஸ் வெற்றி!

0
408
ICT

இந்திய அணியின் தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில், முதல் தொடராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் மூன்றாவது போட்டி இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த மாற்றமும் செய்யப்படாத இந்திய அணியில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் துவக்க வீரர்களாக வந்தார்கள்.

- Advertisement -

கில் இந்த முறை 6 பந்தில் 12 ரன்கள் எடுத்தும், திலக் வர்மா ரன்கள் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலும் ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து ஜோடி சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சூர்யா குமார் யாதவ் 70 பந்தில் 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். ஜெய்ஸ்வால் 41 பந்தில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதற்கு அடுத்து தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூரியகுமார் 55 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன், தனது நான்காவது சர்வதேச டி20 சதத்தை அடித்து அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். ரிங்கு சிங் 10 பந்தில் 14 ரன்கள், ஜிதேஷ் ஷர்மா 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் லிசாட் வில்லியம் மற்றும் கேசவ் மகாராஜ் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதற்கு அடுத்து இலக்கை நோக்கி களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பிரட்ஸ்கி 4, ரீசா ஹென்றிக்ஸ் 8, எய்டன் மார்க்ரம் 25, ஹென்றி கிளாசன் 5, டெவோன் பெரிரா 12, பெலுவாக்கியோ 0, கேசவ் மகராஜ் 1, டேவிட் மில்லர் 35, லிசாட் வில்லியம்ஸ் 0, சம்சி 1 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

முடிவில் 13.5 ஓவர்களில் 95 ரன்கள் ஆப்பிரிக்க அணி சுருண்டு, 106 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்திய பந்து வீச்சு தரப்பில் 2.5 ஓவர்கள் பந்துவீசி, 17 ரன்கள் மட்டும் விட்டு தந்து ஐந்து விக்கெட் கைப்பற்றினார். ஜடேஜா 2, முகேஷ் குமார் மற்றும் அர்ஸ்தீப் இருவரும் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி மழையால் விளையாட முடியாமல் இரத்தானது. இந்த நிலையில் இரண்டாவது போட்டியை தென் ஆப்பிரிக்கா வெல்ல, மூன்றாவது போட்டியை திருப்பி இந்தியா வெல்ல, தற்பொழுது இந்த தொடர் ஒன்றுக்கு ஒன்று என சமனில் முடிந்திருக்கிறது!