சூரியகுமார் முன்னால மேக்ஸ்வெல் வெறும் ஜூஜூபி – ஸ்ரீகாந்த் சர்ச்சை பேச்சு!

0
1013
Maxwell

மூன்று டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடர்களில் விளையாட இலங்கை அணி சமீபத்தில் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்திருக்கிறது!

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இந்திய அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் இலங்கை அணியை எதிர்த்து விளையாடியது.

முதல் ஆட்டத்தில் இந்திய அணியும் இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணியும் வெல்ல தொடர் சமநிலை வகித்தது. நேற்று முன்தினம் தொடரை நிர்ணயிக்கும் கடைசி போட்டி நடைபெற்றது!

தொடரின் இந்த கடைசி போட்டியில் இந்திய டி20 கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 51 பந்துகளில் 112 ரன்கள் குவித்து டி20 கிரிக்கெட்டில் தனது சர்வதேச மூன்றாவது சதத்தை பதிவு செய்து அசத்தினார்.

சூரிய குமாரின் பேட்டை திறமை பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தனது மகன் அனிருதா உடன் தங்களது யூடியூப் சேனலில் கலந்துரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இதில் பேசிய ஸ்ரீகாந்த் தன் மகனிடம்
” டி20 கிரிக்கெட்டில் சிறந்த பேட்ஸ்மேன்களில் சூரியகுமார் ஒருவர் என்பது சரியில்லை. டி20 கிரிக்கெட்டில் தலைசிறந்த பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ்தான். ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் கிறிஸ் கெயில் கூட இவ்வளவு அதிரடியாக இத்தனை ஷாட்களை கொண்டு விளையாட வில்லை!” என்று ஆரம்பித்தார்…

ஆனால் பின்பு அவர் தொடர்ந்து பேசும் பொழுது ” மேக்ஸ்வெல்லை எல்லாம் எடுத்துக் கொண்டால் சூரியகுமார் முன்னாடி ஒன்னுமே கிடையாது. சூரியகுமார் முன்னாடி மேக்ஸ்வெல் ஒரு ஜூஜூபி” என்று சூரிய குமாரை பாராட்ட கீழ இறங்கி பேச ஆரம்பித்து விட்டார். இது பார்ப்பவர்களுக்கு கொஞ்சம் முகச்சுழிப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

மேலும் நியூசிலாந்து நாட்டுக்கு எதிராக நியூசிலாந்தில் சூரியகுமார் யாதவ் தனது இரண்டாவது டி20 சதத்தை அடித்த பொழுது, மேக்ஸ்வெல் அவரது பேட்டிங் குறித்து வியந்து பாராட்டி அதைச் சமூக வலைதளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்க ஸ்ரீகாந்த் பேசிய விதம் இந்திய ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை என்பதுதான் உண்மை!