ரோகித்தின் அந்த ஒரு போன் கால்.. டிராவிட்டின் முடிவை மாற்ற அதுவே காரணம்.. சூரியகுமார் வெளியிட்ட ரகசியம்

0
1311

இந்த டி20 உலக கோப்பை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவைத் தாண்டி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டுக்கு மறக்க முடியாத தருணமாக அமைந்திருக்கிறது.

ஆனால் அவர் இந்த சிறப்புமிக்க தருணத்தை 2023ம் ஆண்டு உலக கோப்பையோடு மிஸ் செய்திருப்பார் என்று இந்திய அணி வீரர் சூரியகுமார் யாதவ் ராகுல் டிராவிட் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

2023ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த போது அந்தத் தருணம் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது. அது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி தாண்டி இந்திய அணியின் பயிற்சியாளர் ஆன ராகுல் டிராவிட்டுக்கும் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதன் காரணமாக அவர் 2023ம் ஆண்டு உலக கோப்பையோடு தனது பயிற்சியாளர் பதவியை விட்டு விலகுவதாக கூறிய நிலையில் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்கவே டிராவிட் தனது முடிவை மாற்றியதாகவும், இந்த டி20 உலக கோப்பையை வென்ற பின்னர் ரோகித் சர்மாவுக்கு டிராவிட் நன்றி கூறியதாகவும் இந்திய அணி வீரர் சூரியகுமார் யாதவ் கூறியிருக்கிறார்.

இது குறித்து சூரியகுமார் யாதவ் விரிவாக கூறும்பொழுது “இந்த டி20 உலக கோப்பையை வென்று முடித்ததும் பயிற்சியாளர் டிராவிட் ரோகித் சர்மாவிடம் வந்து ‘நவம்பரில் அந்த தொலைபேசி அழைப்புக்கு நன்றி’ என்று கூறினார். அதாவது 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு டிராவிட் தனது பயிற்சியாளர் பதவியை தொடங்க விரும்பவில்லை. இதனால் அணியின் கேப்டன் ரோஹித் மற்றும் ஜெயிஷா சார் ஆகியோர் அவரை சமாதானப்படுத்தவே அதன் பிறகு தன் மனதை மாற்றிக் கொண்டார். டிராவிட் சார் விராட் பாய் முதல் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட ஜூனியர் வீரர்கள் வரை இந்திய அணி ஆடிய டி20 ஆட்டங்களின் வரைபடத்தை காட்டினார்.

- Advertisement -

அந்த எண்ணிக்கை 800க்கும் அதிகமாக இருந்தது. பின்னர் அவர் காட்டிய இரண்டாவது வரைபடத்தில் அணி பயிற்சியாளர் டிராவிட் உட்பட அனைத்து ஊழியர்களும் பங்கு பெற்ற போட்டிகளை காட்டினார். மேலும் அவர் சரியான நேரத்தில் நீங்கள் தான் உங்களுக்கு சரியான நீதிபதி. எல்லாவற்றையும் மறந்து விட்டு விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துமாறு எங்களுக்கு கூறினார். உலகக்கோப்பை கையில் எடுத்து டிராவிட் சாருடன் கொண்டாடிய அந்த 30 வினாடி கிளிப் என் வாழ்நாள் முழுவதும் சேமித்து வைக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:இந்தியா ஜிம்பாப்வே டி20.. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல்ல.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. தொடங்கும் நேரம் மற்றும் நாள் விவரம்

ஆகையால் இந்த டி20 உலக கோப்பைத் தொடர் ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய வீரர்களுக்கு மறக்க முடியாத ஒரு தருணமாக அமைந்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.