உண்மைய ஒன்னும் செய்ய முடியாது.. பெரிய வாய்ப்பு தம்பி – ருதுராஜுக்கு சூரியகுமார் வாழ்த்து

0
594
Ruturaj Gaikwad and Suryakumar Yadav

இதுவரையில் நடந்திருக்கும் ஐபிஎல் தொடர்களை எடுத்துக் கொண்டால், ஒட்டுமொத்தமாக சேர்த்து ஒரு வீரரை முதல் இடத்தில் வைக்க வேண்டும் என்றால் அது மகேந்திர சிங் தோனியாகத்தான் இருப்பார். ஐபிஎல் தொடருக்கு அவரால் உருவாக்கப்பட்டிருக்கும் விளம்பரம் மிகப்பெரியது. இந்தியாவிற்கு வெளியிலும் அது தொடர்கிறது.

ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியது, கேப்டனாக அதிக போட்டிகளில் வென்றது, கேப்டனாக அதிக ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றியது, கேப்டனாக அதிக முறை இறுதிப்போட்டி மற்றும் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெற்றது என, கேப்டனாக மட்டுமே ஐபிஎல் தொடரில் பல சாதனைகள் தோனி வசம் இருக்கின்றன.

- Advertisement -

தற்பொழுது 42 வயதாகும் அவர் இந்த ஐபிஎல் சீசன் உடன் ஓய்வு பெறலாம் என்பது பெரும்பாலானவர்களின் கருத்தாக இருந்து வருகிறது. மேலும் அவருடைய கடைசி ஐபிஎல் தொடராக இருக்கும் பட்சத்தில், ஏற்கனவே ரவீந்திர ஜடேஜாவை தான் விளையாடும்பொழுது கேப்டனாக கொண்டு வந்தது சரி இல்லாமல் போன காரணத்தினால், இந்த முறை அப்படி எதுவும் செய்ய மாட்டார் என எல்லோரும் நினைத்திருந்தார்கள்.

இப்படியான நிலையில் மகேந்திர சிங் தோனி அது குறித்து எந்த விதமான அச்சமும் இல்லாமல் மிக தைரியமாக கேப்டன் பதவியில் இருந்து விலகிக் கொண்டதோடு, சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை மனதில் வைத்து இளம் வீரர் ருதுராஜை புதிய கேப்டன் ஆகவும் கொண்டு வந்திருக்கிறார்.

மறுக்க முடியாது இது பெரிய வாய்ப்பு

ருதுராஜை பொறுத்த வரையில் அவரது தனது மாநில அடியான மகாராஷ்டிரா அணிக்கு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கேப்டனாக இருக்கிறார். மேலும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இந்திய டி20 அணியின் கேப்டனாக சென்று தங்கப்பதக்கமும் வென்று வந்திருக்கிறார். கேப்டனாக செயல்பாட்டு அளவில் அவர் களத்தில் மிகவும் நிதானமாகவும், அதே சமயத்தில் கேப்டன்ஷிப் குறித்த புரிதலோடும் செயல்படுகிறார்.

- Advertisement -

குறிப்பாக ருதுராஜ் கேப்டனாக தனிப்பட்ட வீரர்கள் களத்தில் தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பைக் கொடுக்க விரும்பக்கூடியவராக இருக்கிறார். தனிப்பட்ட வீரர்களின் திட்டங்களில் தலையிட்டு அதை மாற்றக் கூடியவராக அவர் இருப்பதில்லை. ஆட்டம் நகர்ந்து செல்லும் சூழ்நிலைக்கு தகுந்தபடி தேவைப்பட்டால் சில மாற்றங்களை செய்து கொள்கிறார். மேலும் களத்தில் பதட்டப்படாமல் அமைதியாக அணியை வழிநடத்துகின்ற காரணத்தினால், இந்த முறை கேப்டன் பொறுப்பை தோனி மாற்றி கொடுத்த பொழுது ரசிகர்கள் இந்த முடிவுக்குறித்து பெரிதான அதிருப்தியை வெளிப்படுத்தவில்லை.

இதையும் படிங்க : கேப்டன்கள் சந்திப்புக்கு வராத ஷிகர் தவான்.. ஜிதேஷ் சர்மா வர காரணம் என்ன ? – வெளியான தகவல்கள்

இந்த நிலையில் இந்திய டி20 அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் ருராஜிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பொழுது “ஒரு பெரிய வீரரின் இடத்தை நிரப்ப வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பது உண்மை. இதை நிராகரிக்க முடியாது. ஆனால் குளிர்ச்சியான மற்றும் அமைதியான இயல்பினால், சிஎஸ்கே அணியின் பாரம்பரியத்தை நீங்கள் முன்னெடுத்துச் செல்வீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்கள் அன்பும் அதிர்ஷ்டமும் கிடைக்க விரும்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.