கேப்டன்கள் சந்திப்புக்கு வராத ஷிகர் தவான்.. ஜிதேஷ் சர்மா வர காரணம் என்ன ? – வெளியான தகவல்கள்

0
5925
Dhawan Punjab Kings

ஐபிஎல் 17ஆவது சீசன் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் துவங்க இருக்கின்ற காரணத்தினால், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளின் கேப்டன் பங்குபெறும் சம்பிரதாய நிகழ்வு சென்னையில் வைத்து நடைபெற்றது.

இந்த நிகழ்வில் எல்லோரும் ஆச்சரியப்படும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இளம் வீரர் ருதுராஜ் வந்தார். மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பில் இருந்து நகர்ந்து கொண்டு, புதிய கேப்டனாக ருதுராஜை கொண்டு வந்திருக்கிறார். புதிய கேப்டனுக்கு தான் விளையாடும் காலத்தில் அனுபவம் கிடைக்க தோனி இவ்வாறான முடிவை எடுத்திருக்கிறார்.

- Advertisement -

தற்பொழுது பெரிய அளவில் சமூக வலைதளத்தை இந்த செய்தி ஆக்கிரமித்து இருக்கிறது. ஏற்கனவே 2022 ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜாவை இப்படித்தான் மகேந்திர சிங் தோனி, அந்த சீசன் ஐபிஎல் தொடர் தொடங்க இருக்க ஒரு நாள் முன்னதாக புதிய கேப்டனாக கொண்டு வந்து விலகிக் கொண்டார். தற்பொழுதும் அதே முறையில் செயல்பட்டிருக்கிறார்.

10 அணிகளுக்கு 9 கேப்டன்கள் மட்டுமே பங்கு பெற்ற நிகழ்வு

இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய அணியின் மிகப்பெரிய கேப்டன் தன்னுடைய பொறுப்பில் இருந்து விலகிய செய்தி பெரிய அளவில் பரவி இருந்ததால், பஞ்சாப் கிங்ஸ் அணியின் தரப்பில் நடந்த ஒரு மாற்றம் வெளியில் இருக்கும் யாருக்கும் தெரியாமல் போய்விட்டது.

சென்னையில் நடைபெற்ற ஐபிஎல் கேப்டன்களின் சந்திப்பு நிகழ்வில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா இடம்பெற்றார். மொத்தம் ஒன்பது கேப்டன்கள் மட்டுமே வந்திருந்தார்கள்.

- Advertisement -

மேலும் ஜிதேஷ் சர்மாவை பஞ்சாப் கிங்ஸ் அணி புதிய கேப்டனாகவும் அறிவிக்கவில்லை. ஷிகர் தவான் கேப்டனாக தொடர, ஜிதேஷ் சர்மா துணை கேப்டன் ஆக மட்டும் நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே ஷிகர் தவான் வரமுடியாத காரணத்தினால் இவர் கேப்டன்கள் சந்திப்புக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியின் தரப்பில் வந்திருக்கிறார்.

இதையும் படிங்க : சிஎஸ்கே-வின் புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அறிவிப்பு.. தல தோனியின் சுயநலமற்ற முடிவு

பஞ்சாப் கிங்ஸ் அணி ஒட்டுமொத்த ஐபிஎல் தொடர் வரலாற்றில் 16 வருடங்களில் ஒரு முறை பிளே ஆப் சுற்றும் ஒருமுறை இறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்று இருக்கிறது. கடைசியாக 9 ஐபிஎல் தொடர்களில் தொடர்ச்சியாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதன் காரணமாக எல்லா வகைகளிலும் இந்த அணி ஐபிஎல் தொடரில் மற்ற அணிகளை விட பின்தங்கி கீழே இருக்கிறது. எனவே இந்த முறை இதை மாற்ற தீவிரமாக போராடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.