நன்றாக கலாய்த்து விட்டு தற்போது சமாதானம் செய்கிறார் – ரியான் குறித்து ட்வீட் செய்த சூர்யகுமார் யாதவின் பதிவுக்கு எழுந்த ரசிகர்களின் கமெண்ட்டுகள்

0
218

கிரிக்கெட் போட்டியை பொருத்தவரையில் மைதானத்தில் பேட்ஸ்மேன்கள் அரை சதம் அல்லது சதம் அடித்த பின்னர் அதை கொண்டாடுவார்கள். அதேபோல பந்து வீச்சாளர்களும் விக்கெட்டை கைப்பற்றியவுடன் தங்களுடைய கொண்டாட்டத்தை வெளிப் படுத்துவது வழக்கம். அவ்வாறு வெளிப்படுத்தப்படும் கொண்டாட்டம் ஒரு சில ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்யும் அதே சமயம் ஒரு சில ரசிகர்களை எரிச்சலடைய செய்யும் வாய்ப்பு உள்ளது.

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் வீரர் ரியான் பராக் பீல்டிங் செய்து கொண்டிருக்கையில் ஒரு சில கொண்டாட்டத்தை வெளிப்படுத்துகிறார். முக்கியமாக கேட்ச் எடுத்த பின்னர் அவளுடைய கொண்டாட்டம் வித்தியாசமாக இருக்கும். அவரைப் பற்றி ஒரு சில முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் கூட கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

- Advertisement -

சூர்யகுமார் யாதவ் செய்த டிவிட்

கடந்த திங்கட்கிழமை முதல் தகுதிச்சுற்று ஆட்டத்தில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாடியது நம் அனைவருக்கும் தெரியும். அந்த போட்டியில் கூட ரியான் பராக் மிக அற்புதமாக ஒரு கேட்ச் எடுத்தார். அதைக் குறிப்பிடும் வகையில் மொட்டையாக சூர்யகுமார் யாதவ் தன்னுடைய டுவிட்டர் கணக்கில் ஒரு பதிவிட்டார்.

“களத்தில் அற்புதமான அணுகுமுறை ரியான் பராக் என்று ட்வீட் செய்தார். உண்மையில் சூர்யகுமார் யாதவ் அவரை கலாய்க்கிறார் என்று ரசிகர்கள் அவருடைய பதிவுக்கு கீழ் கமெண்ட் செய்து வந்தனர்.

- Advertisement -

அவருடைய ஃபீல்டிங் குறித்து தான் நான் அவ்வாறு பதிவிட்டேன்

விஷயம் பெரிதாவதை உணர்ந்த சூர்யகுமார் யாதவ் நேற்றைய போட்டியில் அவர் செய்த ஃபீல்டிங் குறித்து தான் நான் அவ்வாறு பதிவிட்டேன், மற்றபடி ஒன்றுமில்லை அமைதியாக இருங்கள் என்று தன்னுடைய விளக்கத்தை இன்னொரு ட்வீட் மூலமாக தெரிவித்தார்.

இருப்பினும் அந்த பதிவிக்கு கீழும் ரசிகர்கள், நன்றாக கலாய்த்து விட்டு தற்பொழுது ஒன்றும் தெரியாதது போல் சமாதானம் செய்கிறார் என்று ஒரு ரசிகர் கமெண்ட் செய்துள்ளார். மற்ற ரசிகர்களும் வேடிக்கையான கமெண்ட்டுகளை தொடர்ந்து பதிவிட்டு வந்த வண்ணம் இருக்கின்றனர்.

இன்று நடைபெற இருக்கும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.