சூர்யா ரொம்ப தகுதியானவர் ; அர்ஸ்தீப் வேற லெவல்- பாகிஸ்தான் சாம்பியன் வீரர் புகழ்ச்சி!

0
3529
Sky

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு பேட்டிங்கில் சூரியகுமார் யாதவும் பந்துவீச்சில் அர்ஸ்தீப் சிங்கும் பெரிய தூண்களாக இருந்து வருகிறார்கள்!

பாகிஸ்தான் அணிக்கு எதிராக விராட் கோலி மிக முக்கியமான வெற்றி ஒன்றை பெற்றுக் கொண்டு வந்து தந்த பிறகு, சூரியகுமார் அடுத்து நெதர்லாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு எதிராக மிகச் சிறப்பாக விளையாடி இரண்டு அரை சாதங்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடியுள்ள மூன்று ஆட்டங்களிலும் சேர்த்து அர்ஸ்தீப் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருக்கிறார். இதில் உலக கோப்பையில் தான் அறிமுகமாகிய முதல் ஆட்டத்தின் முதல் பந்தில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் பாபரை வெளியேற்றி அசத்தினார். அதேபோல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ஒரே ஓவரில் அபாயகரமான பேட்ஸ்மேன்களான குயின்டன் டி காக் மற்றும் ரூசோவ் இருவரையும் வீழ்த்தி ஆச்சரியப்படுத்தினார்.

விராட் கோலி தற்சமயம் நல்ல பேட்டிங் ஃபார்ம்க்கு வந்திருப்பதோடு சூரியகுமாரும் நல்ல பேட்டிங் பார்மில் இருந்து அவருடன் சேர்ந்து சிறப்பாக விளையாடுவது இந்திய அணிக்கு ஒரு பலம். இன்னொரு புறத்தில் இந்திய அணி ஜஸ்ப்ரித் பும்ராவை இழந்திருந்தாலும், அதை ஈடுகட்டும் விதமாக 23 வயதான இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளர் அர்ஸ்தீப் சிங் இந்திய அணிக்கு கிடைத்திருப்பது நல்ல ஒன்றாக அமைந்திருக்கிறது.

அர்ஸ்தீப் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் பிரபல சுழற் பந்துவீச்சாளர் சயித் அஜ்மல் கூறும் பொழுது “அர்ஸ்தீப் அவர் என்ன ஒரு பந்துவீச்சாளர்! அவர் என்ன ஒரு பந்து வீசப் போகிறார்? எந்தப் பந்தை அவர் நகர்த்துவார்? எந்தப் பந்தை மீண்டும் உள்ளே கொண்டு வருவார்? என்று அவரது மணிக்கட்டை வைத்து உங்களால் கணிக்கவே முடியாது. ஜாகீர் கானுக்கு பிறகு வேகம் மற்றும் ஸ்விங்கை பேட்ஸ்மேன்கள் கண்டுபிடிக்க முடியாத பந்துவீச்சாளராக இவர் வந்திருக்கிறார். இவரை ஒரு பேட்ஸ்மேனாக உங்களால் கண்டுபிடிக்க முடியாது. அவர் இரண்டு பந்துகளை வெளியே கொண்டு போகிறார், அடுத்து ஒரு பந்தை உள்ளே கொண்டு வருகிறார். இப்படி அவர் வீசுவதை ஒரு பேட்ஸ்மேன் எதிர்கொள்வது மிகவும் கடினம். உங்களுக்கு ஞாபகம் இருந்தால் வாசிம் அக்ரம் இதையேதான் செய்வார் ” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் பற்றி பேசியுள்ள சயித் அஜ்மல் ” சூரியகுமார் யாதவ் பற்றி ஒரு விஷயம் தனித்து இருக்கிறது. அவருக்கென்று செயல்பட ஒரு பாத்திரம் கிடைத்திருக்கின்றது. அவர் அதைச் செய்கிறார். எல்லா இந்திய பேட்ஸ்மேன்களும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக அந்த ஆடுகளத்தில் போராட, ஆனால் சூரியகுமார் யாதவ் மிகச் சாதாரணமாக விளையாடினார். அவர் பேட்டின் மத்தியில் பந்தை வாங்கிய விதம், அது பயமின்றி இருந்தது. டி20 பேட்ஸ்மேன்கள் ஐசிசி தரவரிசையில் சூரியகுமார் இருக்கும் இடத்திற்கு மிகத் தகுதியானவர் ” என்று கூறியிருக்கிறார்!