பழைய அதிரடியை காட்டிய ரெய்னா..147 ஸ்ட்ரைக் ரெட்டில் தெறிக்க விட்டார்

0
7284

அபுதாபியில் நடைபெற்று வரும் டி-10 கிரிக்கெட் போட்டியில் சுரேஷ் ரெய்னா அதிரடியாக விளையாடி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட், ஒரு நாள் போட்டி , டி20 கிரிக்கெட் என கிரிக்கெட்டின் உருவம் மாறி மாறி வரும் நிலையில், தற்போது பத்து ஓவர் கிரிக்கெட் போட்டி என புதிய தொடர் ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.

- Advertisement -

இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் சுரேஷ் ரெய்னா டெக்கான் கிளேடியட்டர் அணிக்காக களம் இறங்கினார் .சுரேஷ் ரெய்னா ஐபிஎல் தொடரில் கடந்த மெகா ஏலத்தின் போது அனைத்து அணிகளாலும் புறக்கணிக்கப்பட்டார். இதனை அடுத்து இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஐபிஎல் போட்டிகள் இருந்தும் விலகுவதாக அறிவித்த ரெய்னா கடைசியில் சச்சினுடன் இணைந்து லெஜண்ட்ஸ் கிரிக்கெட்டில் களம் இறங்கினார்.

தற்போது அபுதாபியில் டி-10 போட்டியில் ரெய்னா களமிறங்கினார். கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் அறிமுகமான ரெய்னா டக் அவுட் ஆனார். எனினும் இன்று நியூயார்க் ஸ்ட்ரைக்கர் அணிக்கு எதிரான முக்கிய ஆட்டத்தில் தன்னுடைய திறமையை நிரூபித்தார்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வு செய்த டெக்கான் கிளேடியட்டர் அணியில் ஜேசன் ராய் 5 எண்களிலும் ,நிக்கோலஸ் பூரான் 7 ரன்களிலும் , காட்மோர் டக் அவுட் ஆகியும் அடுத்தடுத்து வெளியேறினர். 19 ரன்களுக்கு மூன்று விக்கெட் இழந்த டெக்கான் கிளேடியேட்டர் அணி தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த சுரேஷ் ரெய்னா தனது அதிரடியை காட்டினார் இரண்டு பவுண்டரி ஒரு இமாலய சிக்சரை .19 பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். இதன் காரணமாக 10 ஓவரில் டெக்கான் அணி 109 ரன்கள் குவித்தது.

- Advertisement -

110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் களமிறங்கிய நியூயார்க் ஸ்ட்ரைக்கர் அணியில் அதிகபட்சமாக இயன் மார்கன் 23 பந்துகளில் 42 ரன்கள் அடித்து அணியின் வெற்றிக்கு வித்துட்டார். மார்கன் அண்மையில் தான் டி20 கிரிக்கெட்டில் இருந்து விலகினார். ஆனால் அவரும் பேட்டிங்கில் கலக்கி இருக்கிறார்.