சுரேஷ் ரெய்னாவின் உலக கோப்பை அரையிறுதி 4 அணிகள்.. சிறிய அணிக்கு இடம்.. ஆச்சரியமான கணிப்பு!

0
2534
Raina

இந்தியாவில் அடுத்த மாதம் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் முழுமையாக நடத்தப்பட இருக்கிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கும் உலகக்கோப்பை தொடர் நவம்பர் 19ஆம் தேதி முடிவுக்கு வருகிறது.

இந்த உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் மொத்த பத்து அணிகளில், ஒன்பது அணிகள் தற்போது ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் விளையாடிக் கொண்டு வருகின்றன.

- Advertisement -

உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் வென்று வந்த நெதர்லாந்து அணி மட்டும் ஒருநாள் போட்டிகள் எதுவும் இல்லாமல் தற்போது இருந்து வருகிறது. ஆசியாவை சேர்ந்த ஐந்து அணிகள் ஆசிய கோப்பையிலும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் இரு நாடுகளுக்கு இடையான ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகின்றன.

நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் 10 அணிகளுக்கும் லீக் போட்டியில் மற்ற அணிகளுடன் ஒரு போட்டி அமைந்திருக்கிறது. இதன் மூலம் எல்லா அணிகளுக்கும் லீக் சுற்றில் ஒன்பது போட்டிகள் கிடைக்கும்.

லீக் சுற்றில் முதல் நான்கு இடங்களைப் புள்ளி பட்டியலில் பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு வருகின்றன. அதிலிருந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் அணிகள் மூலம், ஒருநாள் கிரிக்கெட் உலகச் சாம்பியன் வெளிவரும்.

- Advertisement -

இந்த நிலையில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் எந்தெந்த அணிகள் அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெறும்? எந்த அணி உலகக் கோப்பையை கைப்பற்றும்? என்று பல முன்னாள் வீரர்கள் தங்களது கருத்தை கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை மகேந்திர சிங் தோனி தலைமையில் வென்ற அணியில் இடம் பிடித்திருந்த சுரேஷ் ரெய்னா தனது கணிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

அவர் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணியாக யாரும் தேர்வு செய்யாத இலங்கை அணியைத் தேர்வு செய்து இருக்கிறார். அவர் முதல் மூன்று அணிகளாக இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளையும் நான்காவது அணியாக இலங்கை இல்லை பாகிஸ்தான் அணி என்றும் கணித்திருக்கிறார்.

மேலும் அவர் இந்தியா உலகக் கோப்பையை கைப்பற்றும் என்று கூறியிருக்கிறார். தற்பொழுது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் எஞ்சி இருக்கும் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஆசியக்கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்று தனது விருப்பத்தையும் கூறியிருக்கிறார்.