தற்போது அமெரிக்காவில் நேஷனல் கிரிக்கெட் லீக் 60 ஸ்ட்ரைக்கர்ஸ் என்ற பெயரில் 10 ஓவர் போட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
இந்த தொடரில் முன்னாள் வீரர்கள் மட்டும் இல்லாது, ஆஸ்திரேலியாவின் டிம் டேவிட், தென் ஆப்பிரிக்காவின் சுழல் பந்துவீச்சாளர் சம்ஸி, பங்களாதேஷின் ஷாகிப் அல் ஹசன் போன்ற இந்நாள் வீரர்களும் விளையாடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நியூயார்க் லயன்ஸ் அணியை மீட்ட ஜோடி
இந்த தொடரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் நியூயார்க் லயன்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் வேவ்ஸ் அணி மோதி கொண்ட போட்டி நடைபெற்றது. இதில் சுரேஷ் ரெய்னா விளையாடும் நியூயார்க் லயன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய களம் இறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் ஆஷாத் ஷபிக் மூன்று ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதைத்தொடர்ந்து இலங்கை முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் இந்திய முன்னாள் ஆட்டக்காரர் சுரேஷ் ரெய்னா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியை மீட்டது. இதில் உபுல் தரங்கா 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்.
சுரேஷ் ரெய்னா அதிரடி
இந்த நிலையில் ஒரு முனையில் நினைத்து நின்று விளையாடிய சுரேஷ் ரெய்னா தன்னுடைய அதிரடியில் மிரட்டினார். மீண்டும் பழைய சுரேஷ் ரெய்னாவை பார்ப்பது போல இருந்தது. ஷாகிப் அல்ஹசன் வீசிய ஒரு ஓவரில் இரண்டு பிரம்மாண்ட சிக்ஸர்களை பறக்க விட்டார்.
இறுதிவரை ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்ற சுரேஷ் ரெய்னா 28 பந்துகளை சந்தித்து 53 ரன்கள் குவித்தார். இறுதியாக நியூயார்க் லயன்ஸ் அணி பத்து ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 126 ரன்கள் எடுத்தது.
இதையும் படிங்க : 3 வருடங்களுக்கு பிறகு வருண் சக்கரவர்த்தியை ஏன் எடுத்திங்க?.. நான் வாய்ப்பு தரமாட்டேன் – ஆகாஷ் சோப்ரா விமர்சனம்
இதைத் தொடர்ந்து விளையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் வேவ்ஸ் அணிக்கு ஆடம் ரோசிங்டன் 15 பந்தில் 31 ரன், டிம் டேவிட் 10 பந்துகளில் 19 ரன்கள், ஜோ பர்ன்ஸ் 17 பந்தில் 9 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் இது வெற்றிக்கு போதுமானதாக இல்லை. இறுதியாக நியூசிலாந்து லயன்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
VINTAGE SURESH RAINA 🥶
— Johns. (@CricCrazyJohns) October 5, 2024
– Raina is smashing it in National Cricket League in USA. pic.twitter.com/hB7Uw7gSuO