நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி விராட் கோலி சிறப்பாக விளையாடி பெங்களூர் அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் விராட் கோலி குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
சிறப்பாக விளையாடிய விராட் கோலி
சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி அடைந்த பிறகு பெங்களூர் அணி சின்னசாமி மைதானத்தில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் களம் இறங்கி விளையாடியது. முதலில் பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தொடக்க வீரர் விராட் கோலி 42 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர் என 70 ரன்கள் குவித்தார். முதலில் ஆடுகளத்தின் சூழ்நிலையை அறிந்த விராட் கோலி அதற்கு பிறகு தனது கியரை மாற்றி அதன் பிறகு அதிரடியாக விளையாட ஆரம்பித்தார்.
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணி, பெங்களூர் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் மற்றும் சிஎஸ்கே முன்னாள் வீரருமான சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அவசரப்பட்டு விட்டார் என்று தோன்றுகிறது
இது குறித்து சுரேஷ் ரெய்னா கூறும்போது “விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் இருந்து சீக்கிரமே ஓய்வு பெற்று விட்டார் என்று நான் இன்னும் நினைக்கிறேன். அவர் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் வேகத்தையும், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் காட்டிய வேகத்தையும் வைத்துப் பார்த்தால் அவர் இன்னும் தனது உச்சத்தில் இருப்பது போல தெரிகிறது” என்று சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க:3 மேட்ச் தோல்வி.. முதல் 4 ஓவரில் இந்த தப்பை செய்யவே கூடாதுன்னு களமிறங்கினோம்.. நல்ல பலன் கிடைத்தது – விராட் கோலி
விராட் கோலி கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வென்ற பிறகு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்தார். மேலும் அவரோடு இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். தற்போது ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விராட் கோலி விளையாடி வரும் நிலையில் அவரைப் போன்றே மும்பை அணிக்காக ரோகித் சர்மாவும் தனது அதிரடியான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






