3 மேட்ச் தோல்வி.. முதல் 4 ஓவரில் இந்த தப்பை செய்யவே கூடாதுன்னு களமிறங்கினோம்.. நல்ல பலன் கிடைத்தது – விராட் கோலி

0
173

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 42வது ஆட்டத்தில் பெங்களூர் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற விதம் குறித்து விராட் கோலி சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ராஜஸ்தான் பெங்களூரு மோதல்

பெங்களூரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி அதிகபட்சமாக 42 பந்துகளை எதிர்கொண்டு 70 ரன்கள் குவித்தார். இதில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மூன்றாவது வரிசை வீரர் படிக்கல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 27 பந்துகளை எதிர்கொண்டு 50 ரன்கள் குவித்தார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமைந்தாலும், அதற்கு பின்னால் வந்த வீரர்கள் அதனை சரியாக பயன்படுத்தி வெற்றி இலக்கை நோக்கி விளையாட முடியவில்லை. இதில் அற்புதமாக விளையாடிய தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 49 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்ஸர்கள் அடங்கும். அதற்குப் பிறகு இறுதியில் 34 பந்துகளை எதிர் கொண்டு 47 ரன்கள் குவிக்க ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் சிறப்பாக பந்து வீசிய ஹாஸில்வுட் 4 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

- Advertisement -

வெற்றி குறித்து விராட் கோலி

இந்த வெற்றி குறித்து விராட் கோலி கூறும் போது “இந்த போட்டியில் வெற்றி பெற்றது மிகவும் சந்தோஷமாக உள்ளது. பேட்டிங் யூனிட்டாக நாங்கள் சில விஷயங்களை விவாதித்தோம். அதனை இந்த போட்டியில் நன்றாகவே செயல்படுத்தினோம். இரண்டாம் பாதியில் பனிப்பொழிவு நன்றாக உதவியது. இந்த மைதானத்தை பொறுத்தவரையில் டாஸ் வெல்வது என்பது மிகவும் முக்கியமான விஷயமாகும். முதல் சவால் அதுதான், இரண்டாம் பாதியில் ஒரு விஷயம் எங்களுக்கு சாதகமாக மாறியது. முதல் சில ஆட்டங்களில் தோல்வி அடைந்த பிறகு இந்த போட்டியில் ஒருவர் ஆட்டத்தை கடைசி வரை எடுத்துச் செல்ல வேண்டும் எனவும், மற்றவர்கள் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்து ஆடினோம்.

இதையும் படிங்க:ஒரே ஆளாக மேட்சை திருப்பிய ஹேசில் வுட்.. விராட் கோலி தரமான ஆட்டம்.. ராஜஸ்தானை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆர்சிபி

இந்த விஷயம் எங்களுக்கு உண்மையிலேயே நன்றாக பலன் கொடுத்தது. முதல் நான்கு ஓவர்களில் வேகம் மற்றும் பவுன்ஸ் அதிகமாக இருக்கும். முதல் மூன்று ஆட்டங்களில் நாங்கள் அதிகமான ஷாட்கள் ஆட முயற்சித்தோம் என்று நினைக்கிறேன். எனவே இன்றைய போட்டியில் பந்தை வரவைத்து அதற்கு தகுந்தவாறு ஆடினோம். இப்போது பேட்டிங் செய்வதற்கான வழிமுறையை கண்டுபிடித்தோம். சொந்த மைதானத்தை பொறுத்த வரையில் 15 முதல் 20 ரன்கள் என்பது கூடுதலாக எடுக்க வேண்டும். ஆர்சிபி ரசிகர்கள் நல்ல மற்றும் கெட்ட காலங்களிலும் எங்கள் கூட இருந்தனர். எங்களுக்கு நன்றாகவே ஆதரவு அளித்து வருகின்றனர்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -