50 ஓவர் கிரிக்கெட் உலக கோப்பை 2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிகளும் சரியான வீரர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 50 ஓவர் உலகக் கோப்பை குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கிரிக்கெட்டில் மிக முக்கியமாக பார்க்கப்படும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா தென்னாபிரிக்காவில் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் டி20 உலக கோப்பை நடைபெற்ற நிலையில் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியது. எனவே அதனை தவிர்க்கும் விதமாக இந்த முறை கட்டாயம் வெற்றி பெறவேண்டிய நிலையில் இந்திய அணி அதற்கான திட்டங்களை தீட்டி வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஒருநாள் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்று விடுவார்கள் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சுரேஷ் ரெய்னா இந்திய அணி உலக கோப்பையை வெல்ல வேண்டுமானால் இவர்கள் இருவரும் விளையாட வேண்டியது கட்டாயம் என்ற சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து ரெய்னா கூறும்போது “சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளதால் 50 ஓவர் உலகக் கோப்பையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விளையாட வேண்டும். இவர்கள் இருவருக்கும் நிறைய அனுபவம் உள்ளது ரோகித் சர்மா அதிகமாக உள்ளூர் போட்டிகளில் விளையாடுவார் என்பது தெரியும். அவர் தற்போது இதற்கு தகுந்த வகையில் பயிற்சிகள் செய்து வருகிறார். தேர்வாளர்கள் எந்த மாதிரியான அணியை அமைப்பார்கள் என்பதில் தான் அனைத்தும் உள்ளது.
இதையும் படிங்க:ஆசிய கோப்பைக்கு பாகிஸ்தான் ஆப்கான் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. இந்திய அணிக்கு பாதிப்பா? – முழு தகவல்கள்
ரோகித் சர்மாவிற்கு கேப்டனாக மேலும் ஒரு வாய்ப்பு கொடுப்பேன். இவர்கள் இருவரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட வேண்டும். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற போது அதில் விராட் கோலி ஒருவராக இருந்தார். எனது அதேபோல ரோஹித் சர்மாவும் இருக்க வேண்டும். எனவே இந்திய தேர்வுக்குழு இவர்கள் இருவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் என்று நம்புகிறேன்” என சுரேஷ் ரெய்னா பேசியிருக்கிறார்.






