ஆசிய கோப்பைக்கு பாகிஸ்தான் ஆப்கான் போட்ட சூப்பர் ஸ்கெட்ச்.. இந்திய அணிக்கு பாதிப்பா? – முழு தகவல்கள்

0
96
Afghanistan

ஆசியக் கோப்பை தொடருக்கு தயாராவதற்கு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் யுஏஇ மண்ணில் சிறப்பான திட்டத்தை வகுத்து இன்று களம் இறங்குகின்றன.

அடுத்த மாதம் செப்டம்பர் ஒன்பதாம் தேதி முதல் யுஏஇ மண்ணில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன் ஒரு பிரிவிலும் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் இன்னொரு பிரிவிலும் இடம் பெற்று இருக்கின்றன. ஒரு பிரிவில் இடம் பெற்றுள்ள அணி அதே பிரிவில் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும்.

- Advertisement -

முத்தரப்பு தொடர்

இந்த நிலையில் ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற இருக்கும் யுஏஇ மண்ணில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ என மூன்று நாடுகள் விளையாடும் முத்தரப்பு டி20 தொடர் இன்று துவங்குகிறது. இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.

தற்போது இளம் அணியாக பாகிஸ்தான் அணி களம் இறங்க இருக்கிறது. இந்த நிலையில் தனது பிரிவில் இடம் பெற்றுள்ள யூஏஇ அனுப்பி எதிராக அவர்களது மண்ணிலேயே விளையாடவும் இருக்கிறது. இது பாகிஸ்தான் அணிக்கு ஆசியக் கோப்பை தயார் ஆவதற்கு மிகவும் முக்கியமான தொடராக அமைகிறது.

- Advertisement -

இந்திய அணிக்கு சவாலா?

ஒருபுறம் பாகிஸ்தான் அணி யுஏஇ மண்ணில் முன்கூட்டியே தயாராவது இந்திய அணிக்கு தனது பிரிவில் பிரச்சனையை உண்டு செய்யலாம். அதே சமயத்தில் இப்போது அசுர வளர்ச்சி கண்டிருக்கும் ஆப்கானிஸ்தான் அணி விளையாடுவது இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு பெரிய பிரச்சனையை உண்டு செய்யும்.

இதையும் படிங்க : துலீப் கோப்பையின் 2வது நாள்.. டெஸ்டில் கெத்து காட்டிய கம்பீர் செல்லப்பிள்ளை.. ஹாட்ரிக் எடுத்து காஷ்மீர் வீரர் கலக்கல்

எனவே நடப்பு ஆசிய கோப்பை தொடரில் இலங்கை பங்களாதேஷ் மற்றும் இந்தியா என மூன்று அணிகளுக்கும் நடைபெற இருக்கும் முத்தரப்பு தொடர் பின்னடைவை கொடுப்பதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் ஆசிய கோப்பைக்கு முன்பாக சிறந்த நகர்வை மேற்கொண்டு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -