இந்திய கிரிக்கெட்

ஆர்சிபி இந்த முறையும் கப் அடிக்கலாம்.. சிஎஸ்கே கிட்ட 2010ல இருந்த விஷயம் இப்ப அவங்க கிட்ட இருக்கு – சுரேஷ் ரெய்னா பேச்சு

இந்த முறை ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையை வெல்வதற்கு தேவையான விஷயம் அவர்களிடம் இருப்பதாக சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.

- Advertisement -

கடந்த 18 வது ஐபிஎல் சீசனில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை ஆர்சிபி அணி வென்றது. தற்போது அவர்களுக்கு வலிமையான அணி கிடைத்திருப்பதால் தொடர்ந்து இரண்டாவது முறை கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளது.

விராட் கோலி மனநிலை இதுதான்

இந்த நிலையில் சிஎஸ்கே அணி 2010 மற்றும் 2011ஆம் ஆண்டு தொடர்ந்து கோப்பையை வெல்லும் போது என்ன விஷயம் இருந்ததோ அது தற்பொழுது ஆர்சிபி அணியிடமும் இருப்பதாக சுரேஷ் ரெய்னா கூறி இருக்கிறார்.

இது குறித்து சுரேஷ் ரெய்னா பேசும்போது ” விராட் கோலி சின்னசாமி மைதானத்தை அடையும்போது சாம்பியன் பட்டத்தை நாம் காப்பாற்ற வேண்டும் யார் கையை உயர்த்தப் போகிறீர்கள் என்றுதான் கேட்பார். மேலும் நாம் அதிர்ஷ்டத்தால் வெற்றி பெறவில்லை மிகவும் கடுமையாக உழைத்து வெற்றி பெற்றோம் அதை தக்க வைக்க வேண்டும் என்று சொல்லுவார்”

- Advertisement -

அதே விஷயம் இருக்கிறது

“தற்போது ஆர்சிபி அணியில் இந்தியாவுக்காக விளையாடிய வீரர்கள் ஏழு முதல் எட்டு பேர் இருக்கிறார்கள். சிஎஸ்கே அணி 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டு தொடர்ந்து கோப்பையை வென்ற போது இதே போல இந்திய அணிக்காக விளையாடிய வீரர்கள் ஏழு எட்டு பேர் இருந்தார்கள். தற்போது ஆர்சிபி அணிக்கும் இது இருக்கிறது”

இதையும் படிங்க : சிஎஸ்கே கப் அடிக்கணும்னா.. இந்த 12 பேரை உள்ள இறக்குங்க.. அந்த 2 பேர் வேணாம் – முகமது கைஃப் தேர்வு

“இப்போது ஆர்சிபி அணி வலிமையாக உள்ளது. அவர்கள் வெங்கடேஷ் ஐயரை சேர்த்து இருக்கிறார்கள். மேலும் படிக்கல தொடர்ந்து ரன் எடுத்து வருகிறார். தற்போது அந்த அணியின் வலிமை என்னவென்றால் அவர்களிடம் தெளிவான நிலையான பேட்டிங் வரிசை உள்ளது என்பதுதான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts