இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு சிஎஸ்கே அணி இம்பேக்ட் பிளேயர் உடன் எந்த 12 வீரர்களை களம் இறக்கினால் சரியாக இருக்கும் என்பது குறித்து முகமது கைப் கூறியிருக்கிறார்.
19ஆவது ஐபிஎல் சீசன் இந்த மாதம் மார்ச் 28ஆம் தேதி துவங்ககிறது. கடந்த ஐபிஎல் சீசன் சிஎஸ்கே அணிக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் மோசமானதாக அமைந்திருந்தது. இந்த முறை ஐபிஎல் மினி ஏலத்தில் ஒட்டுமொத்த அணியும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
கைப் தவிர்த்த வீரர்கள்
இந்த முறை ஐபிஎல் மினி ஏலத்தில் 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் கார்த்திக் சர்மா ஆரம்பம் முதலே சிஎஸ்கே அணி பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் சுழல் பந்துவீச்சை சிறப்பாக விளையாடக்கூடிய சர்பராஸ் கான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் முகமது கைஃப் இந்த இரண்டு வீரர்களையும் தவிர்த்து விட்டார். இதில் கார்த்திக் சர்மாவுக்கு பதிலாக உர்வில் படேல் மற்றும் பதிலாக சர்ப்ராஸ் கான் பதிலாக 14.2 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட ரவீந்திர ஜடேஜாவுக்கான மாற்று வீரர் பிரசாந்த் வீரை தேர்வு செய்திருக்கிறார்.
சிஎஸ்கே பிளேயிங் லெவன்
இவர் வெளியிட்டிருக்கும் சிஎஸ்கே பிளேயிங் லெவனின் இன்னொரு ஆச்சரியமாக சிவம் துபேவுக்கு ஐந்தாவது இடமும், டிவால்ட் பிரிவிஸ்க்கு ஆறாவது இடமும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க : என்னை விட்டுட்டு கம்பீர் சுந்தரை ஆதரித்தார்.. ஆனாலும் அவர் மேல மரியாதை இதனால்தான் இருக்கு – அஸ்வின் பேச்சு
கைப் சிஎஸ்கே பிளேயிங் XI: சஞ்சு சாம்சன், ஆயுஷ் மத்ரே, ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் படேல், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், பிரஷாந்த் வீர், எம்எஸ் தோனி, நூர் அகமது, கலீல் அகமது மற்றும் நாதன் எல்லிஸ். இம்பேக்ட் வீரர்: மாட் ஹென்றி.






