இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று மும்பை மைதானத்தில் நடக்க இருக்கும் ஐந்தாவது டி20 போட்டியில் கேப்டன் சூரியகுமார் யாதவ் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும்? என சுரேஷ் ரெய்னா அறிவுரை கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் தொடர்ந்து ஏழு போட்டிகளாக குறிப்பிடும்படி ரன்கள் எதுவும் அடிக்காமல் இருந்து வருகிறார். ஃபார்ம் இல்லாத காரணத்தினால் கடந்த போட்டியில் அவர் ஆட்டம் இழந்த விதம் மிகவும் பரிதாபமாக இருந்தது. எனவே அவர் திரும்ப சிறப்பான முறைக்கு திரும்ப வேண்டியது இருக்கிறது.
மும்பை தரும் முக்கிய நம்பிக்கை
சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மேலும் அவர் மும்பை மாநில வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஃபார்ம் இல்லாமல் இருந்து வரும் அவர் தன்னுடைய சொந்த மைதானத்தில் மீண்டும் திரும்பி வருவார் என்று நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.
இதுகுறித்து பியூஸ் சாவ்லா முதலில் பேசும்பொழுது “சூரியகுமார் யாதவ் தன்னம்பிக்கை வளர அவருக்கு ரன்கள் தேவைப்படுகிறது. நான் அவருடைய பேட்டில் இருந்து ரன் வருவதை பார்க்க விரும்புகிறேன். 200 ரன்கள் அடிக்கப்படுமா? என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் சூரியகுமார் யாதவ் நிலைத்து நின்று விளையாட ஆரம்பித்தால், அவர் என்ன ஸ்டிரைக் ரேட்டில் விளையாடுவார் என்று தெரியும். அப்படி நடக்கும் பொழுது இந்திய அணி தாராளமாக 200 ரன்களை கடந்து விடும் என்று கூறியிருக்கிறார்”
சூரியகுமார் இதை செய்தால் போதும்
இதுகுறித்து சுரேஷ் ரெய்னா பேசும் பொழுது “பியூஸ் சாவ்லா ஒரு நல்ல பாயிண்டை தொட்டு பேசி இருக்கிறார். ஏனென்றால் சூரியகுமார் கேப்டனாக 7 போட்டிகளிலும் தொடர்ந்து ரன்கள் எடுக்காமல் இருந்து வந்த போதிலும் கூட மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் மீண்டும் ரன்கள் எடுப்பதற்கு பெரிதாக எதுவும் செய்ய வேண்டியது இல்லை. முதல் 10 அல்லது 15 பந்துகள் விளையாடினாலே அவருக்கு ரன்கள் வந்துவிடும்”
இதையும் படிங்க : இந்தியாவை பார்த்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் திருந்தல.. சாம்பியன்ஸ் டிராபிக்கு மோசமான தேர்வு – வாசிம் அக்ரம் விமர்சனம்
“சஞ்சுவுக்கும் அப்படித்தான். வான்கடே மைதானத்தில் அவரும் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த மைதானத்தில் அவர் பந்தை பேட்டில் மிடில் செய்தால் அது சிக்ஸராக மாற அதிக வாய்ப்புகள் உண்டு. எனவே இவரும் மீண்டும் ரன்கள் மும்பையில் எடுக்கலாம். இந்த போட்டியில் இருவருக்குமே இங்கு முக்கியமானதாக மாறி இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






