இந்தியாவை பார்த்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் திருந்தல.. சாம்பியன்ஸ் டிராபிக்கு மோசமான தேர்வு – வாசிம் அக்ரம் விமர்சனம்

0
641
Akram

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு கடைசி அணியாக பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் பாகிஸ்தான் அணி குறித்து பாகிஸ்தான் லெஜெண்ட் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் விமர்சனம் செய்திருக்கிறார்.

இந்த தொடரில் பங்கேற்க இருக்கும் எட்டு அணிகளில் ஏழு அணிகள் முன்கூட்டியே தங்களது அணிகளை அறிவித்து விட்டன. இந்த தொடரை நடத்தும் பாகிஸ்தான் மட்டும் அணி அறிவிப்பிற்கு பொறுமை காட்டி வந்தது. கணுக்கால் காயத்தால் பாதிக்கப்பட்ட சையும் அயூப் கிடைப்பார் என எதிர்பார்த்தது. ஆனால் இறுதியில் அவர் காயம் சரியாகாமல் கிடைக்கவில்லை.

- Advertisement -

சர்ச்சையான இரண்டு வீரர்கள்

தற்போது இந்த அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரர் பகார் ஜமான் மீண்டும் இடம்பெற்று இருக்கிறார். பாபர் அசாம் டெஸ்ட் அணியில் நீக்கப்பட்ட பொழுது இவருடைய பேச்சின் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மறைமுகமாக இவரை ஒதுக்கி வைத்திருந்தது. இந்த நிலையில் மீண்டும் இவரை அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது.

மேலும் இந்த அணியில் குல்திஷ் ஷா மற்றும் பாஹிம் அஷ்ரப் இருவரும் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த இருவரின் தேர்வு தான் தற்பொழுது மிகப்பெரிய விமர்சனங்களை பாகிஸ்தானில் உருவாக்கி இருக்கிறது. இருவருடைய செயல்பாடுமே சிறப்பாக இல்லாத பொழுது மீண்டும் இவர்களுக்கு பாகிஸ்தான் அணியில் இடம் கொடுத்தது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

வாசிம் அக்ரம் விமர்சனம்

இதுகுறித்து வாசிம் அக்ரம் கூறும் பொழுது ” இந்த அணியில் பாகிம் அஷ்ரப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால் கடந்த சில ஆண்டுகளில் அவரது பேட்டிங் ஆவரேஜ் 8 பௌலிங் ஆவரேஜ் 100. நாங்கள் ஒரே ஒரு சுழல் பந்துவீச்சாளரை தேர்வு செய்திருக்கிறோம். ஆனால் இந்தியா நான்கு சுழல் பந்துவீச்சாளரை தேர்வு செய்திருக்கிறது. எங்கள் தேர்வு சரியாக இல்லை” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : இங்கி 5வது டி20.. சூர்யா இதை செய்யணும்னு நினைச்சாலும்.. அவரால கண்டிப்பா முடியாது – ஆகாஷ் சோப்ரா கருத்து

இது குறித்து ரசித் லத்தீப் கூறும் பொழுது “இந்த அணியில் அஷ்ரப், பகார் ஜமான், சவுத் சகில் போன்ற வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் கடந்த மூன்று சுற்றுப் பயணங்களில் அணியில் இல்லை. தற்போது முகமது ரிஸ்வான் 1992 ஆண்டு கேப்டன் இம்ரான் கான் தேர்வு செய்தது போல நல்ல பிளேயிங் லெவனை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். சிறந்த அணியை தேர்வு செய்ய தவற விட்டிருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -