பாகிஸ்தானுக்கு எதிரா ஆட இந்திய வீரர்கள் விரும்பல.. வற்புறுத்தினாங்க சூர்யாகிட்ட கேளுங்க – சுரேஷ் ரெய்னா பேச்சு

0
16
Raina

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இந்திய வீரர்கள் யாரும் விரும்பவில்லை என்று தனக்குத் தெரியும் என சுரேஷ் ரெய்னா பரபரப்பான கருத்தை வெளியிட்டிருக்கிறார்.

நேற்று ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில் போட்டி முடிந்ததும் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் கை கொடுக்காமல் பிரிந்து சென்றனர். தற்போது இது உலக கிரிக்கெட்டில் பெரிய அளவில் விவாதிக்கும் விஷயமாக மாறி இருக்கிறது.

- Advertisement -

சூரியகுமார் கருத்து

இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்திய வீரர்கள் யாரும் பாகிஸ்தான் வீரர்களிடம் கை கொடுக்காதது குறித்து கூறும் போது ஸ்போர்ட்ஸ் ஸ்ப்ரிட் என்பதை தாண்டியும் சில விஷயங்கள் இருப்பதாகவும், தாங்கள் காட்டிய எதிர்ப்பு சரியானது என்றும் பேசி இருந்தார்.

மேலும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் இது குறித்து கூறும் போது இந்த போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது என்றும், இது தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்களோடு ஒரு அணியாக தாங்கள் இருக்கிறோம் என்று காட்டுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு என்றும் கூறியிருந்தார். ஆனால் வெளியில் இருந்து இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் சென்றதற்கு எதிர்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

- Advertisement -

இந்திய வீரர்கள் விரும்பவில்லை

இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா பேசும்பொழுது “ஒரு விஷயம் எனக்கு நிச்சயமாக தெரியும். நீங்கள் நேரடியாக இந்திய வீரர்களிடம் கேட்டால் அவர்கள் ஆசியா கப்பில் விளையாட விரும்பவில்லை என்பதுதான் உண்மை. ஒருவகையில் பிசிசிஐ இந்த தொடருக்கு ஒப்புக்கொண்டதால் இந்திய வீரர்களும் வற்புறுத்தப்பட்டு விளையாட வைக்கப்பட்டு இருக்கிறார்கள்”

இதையும் படிங்க : ஆசிய கோப்பைக்கு வந்ததே பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கதானா?.. இந்திய கோச் கம்பீர் வெளிப்படையான பதில்

“இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் மற்ற இந்திய வீரர்களிடம் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது குறித்து கேட்டிருந்தால், அவர்கள் விளையாட வேண்டாம் என்று தான் கூறியிருப்பார்கள். யாருக்கும் விளையாட வேண்டும் என்கின்ற விருப்பம் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -