ஆசிய கோப்பைக்கு வந்ததே பாகிஸ்தானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கதானா?.. இந்திய கோச் கம்பீர் வெளிப்படையான பதில்

0
58
Gambhir

நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களிடம் ஏன் கைகுலுக்கவில்லை என்பது குறித்து இந்திய தலைமை பயிற்சியாளர் கம்பீர் விளக்கம் அளித்திருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அணியை இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு 127 ரன்னுக்கு கட்டுப்படுத்தினார்கள். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து நான்கு ஓவர்கள் மீதம் வைத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

- Advertisement -

போராட்டத்தில் கலந்த கம்பீர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவின் காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற துயர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காமல் சென்றார்கள். இந்த நிலையில் நேற்று இந்திய அணியின் இந்த போராட்டத்தில் தலைமை பெயர்ச்சியாளர் கம்பீர் கலந்து கொண்டார்.

மேலும் நேற்றைய போட்டி முடிவுக்கு பின்னால் இது குறித்து மிகவும் வெளிப்படையாக அவர் பேசி இருக்கிறார். மேலும் போட்டியில் இந்திய வீரர்கள் செயல்பட்ட விதம் குறித்தும் அவர் மிகவும் பாராட்டியிருக்கிறார். தற்போது இந்த விஷயம் சர்ச்சையாகி வரும் நிலையில் கம்பீர் கருத்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இதனால்தான் செய்தோம்

இதுகுறித்து கம்பீர் பேசும் பொழுது “இந்த போட்டி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஏனென்றால் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு அணியாக எங்கள் ஒற்றுமையை காட்ட நினைத்தோம். மேலும் ஆயுதப் படையின் சிந்தூர் வெற்றிக்கு நாங்கள் நன்றி செலுத்தினோம். மேலும் முயற்சி செய்து நாட்டை பெருமை அடையவும் மகிழ்ச்சி அடையவும் வைப்போம்”

இதையும் படிங்க : இந்தியா கைகுலுக்காதது.. தயவு செய்து கருணை காட்டுங்க.. உங்கள பத்தி நல்லது தானே சொல்றோம் – அக்தர் வேண்டுகோள்

“இதைவிட சிறப்பான ஆட்டத்தை உங்கள் வீரர்களிடம் நீங்கள் கேட்க முடியாது. குறிப்பாக எங்களுடைய பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய விதம். சுழல் வீச்சாளர்கள் மற்றும் பும்ரா என அனைவரும் சிறப்பாக செயல்பட்டார்கள். நீங்கள் வெளிப்படையாகவே உங்கள் பேட்டிங் வரிசையை ஆதரிக்கிறீர்கள். நாங்கள் தொடங்கிய விதம் மிகவும் முக்கியமானது. நல்ல அணிகள் இதைத்தான் செய்கிறார்கள். நாளுக்கு நாள் அவர்கள் சிறப்பாக செயல்படுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -