ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியில், ஆர்சிபி அணியின் கேப்டன் டூ பிளசிஸ் இளம் வீரர் மயங்க் தாகரை விமர்சித்து பேசியதற்கு, முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா தனது கண்டனத்தை தெரிவித்திருக்கிறார்.
ஜெய்பூரில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி 20 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் குவித்தது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 113 ரன்கள் விளாசினார். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19 ஓவர்களில் 189 ரன்கள் குறித்து அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் ஜாஸ் பட்லர் அபார சதம் விளாசி ராஜஸ்தான் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். போட்டியின் போது ராஜஸ்தான் அணி பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் ஆர்சிபி அணியின் இளம் வீரரான மயங்க் தாகர் பவர் பிளேவில் தனது முதல் ஓவர் வீசி 20 ரன்கள் விட்டுக் கொடுத்தார். மொத்தமாக போட்டியில் இரண்டு ஓவர்கள் வீசி 34 ரன்களை விட்டுக் கொடுத்தார்.
இது குறித்து போட்டி முடிந்து செய்தியாளர் கள் சந்திப்பில் பேசிய கேப்டன் டூ பிளஸ்சிஸ் “நாங்கள் சிறப்பாக பந்து வீசினாலும் மயங்க் தாகரின் ஓவரில் 20 ரன்கள் சென்றது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது” என்று கூறியிருந்தார். இதனைக் கண்டு சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா டூ பிளசிஸ் கூறியதற்கு தனது கண்டனத்தை தெரிவித்திருந்தார். மேலும் ரோகித் சர்மா எந்த ஒரு இளம் வீரரையும் இவ்வாறு பேச மாட்டார் என்றும் கூறுகிறார்.
இது குறித்து அவர் மேலும் கூறும் பொழுது
“பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஒரு ஜூனியர் வீரரை இவ்வாறு பேசுவது சரியில்லை. அந்தப் போட்டியில் அணியின் கேப்டனே ரன் அடிக்கவில்லை. நான் பல வருடங்களாக பாப் டூ பிளசியுடன் இணைந்து விளையாடி இருக்கிறேன். அவர் மிகவும் அன்பான நண்பர். ஆனால் இளம் வீரர்களை அவர் ஆதரிக்க வேண்டும்.
மும்பை அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்தபோது இப்படி சொல்வதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். எனவே இளம் வீரர்களை நாம் ஆதரிக்க வேண்டும். மேலும் கிரிக்கெட் அகாடமி திறக்க விரும்பியது குறித்து கேட்கிறீர்கள். எனது முதல் கிரிக்கெட் அகாடமி நான் ஜம்மு காஷ்மீரில் சிறக்க விரும்பினேன். ஏனென்றால் அங்கு பல திறமையான குழந்தைகள் இருப்பதை நான் அறிவேன்.
இதையும் படிங்க:ஆர்சிபி பிளே ஆஃப் விட்டு வெளியே போக காரணம் தினேஷ் கார்த்திக்தான் – இர்பான் பதான் விமர்சனம்
உள்நாட்டு கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகிய தொடர்களின் மூலம் நிறைய இளம் திறமைகள் வளர்ந்துள்ளனர். காஷ்மீரில் குழந்தைகள் வலது புறத்தில் பேட் மற்றும் பந்தையும், இடது புறத்தில் ஏகே 47 துப்பாக்கியும் வைத்துள்ளனர். எனவே அவர்களை பேட் மற்றும் பந்தைத் தொட வைப்பதே எனது நோக்கம்” என்று கூறி இருக்கிறார்